1. Home
  2. தமிழ்நாடு

ரயில் பயணத்தின் போது ஒருவர் தவறி விழுந்தால் மீட்க என்ன செய்வது?

1

ஒருவர் தவறி விழுந்தால் மீட்க என்ன செய்வது?: ரயிலில் பாதுகாப்பிற்காக பயணம் செய்யும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் படியில் நின்று கொண்டும், செல்ஃபோன் மூலம் படம் எடுத்துக் கொண்டும், மற்ற பயணிகளுக்கு இடையூறாக இருப்போர் மீதும் நடவடிக்கை எடுத்து ரயில் பெட்டி கதவுகள் மூடப்பட்டிருக்கும் நிலையை உறுதி செய்கிறார்கள். ரயில் பாதையில் உள்ள மின்மய மின்சார கம்பத்தில் தூரம் கணக்கிடும் வகையில் எண்கள் குறிக்கப்பட்டிருக்கின்றன.

உதாரணமாக, மதுரைக்கும் சென்னைக்கும் இடையே 493 கிலோ மீட்டர் என்று குறிப்பிடும் வகையில் சோழவந்தானுக்கு பிறகு ஒவ்வொரு நூறு மீட்டருக்கும் 471/000, 471/100, 471/200.. எனத் தொடர்ச்சியாக குறிப்பிடப்பட்டிருக்கும். தவறுதலாக யாராவது ரயிலிலிருந்து விழுந்துவிட்டால் அதன் அருகில் உள்ள மின்சார கம்பத்தில் எழுதப்பட்டிருக்கும் எண்ணைக் குறிப்பிட்டு "ரயில் மதாத்" (Rail MADAD) செயலியில் புகார் செய்தால், பாதிக்கப்பட்டவரை விரைவில் மீட்டு காப்பாற்ற முடியும்" எனத் தெரிவித்துள்ளது.

ரயில் பயணத்தின் போது செல்போன் தவறிவிழுந்தால்..?

பலர் ரயில் பயணத்தின் போது ஜன்னல் அல்லது படியின் அருகே செல்போனை பயன்படுத்தியபடி வருவர், அல்லது இயற்கைக் காட்சியைத் தனது செல்போனில் புகைப்படம் எடுத்தபடி வருவார்கள். அப்பொழுது தவறி ரயிலுக்கு வெளியே விழுந்துவிடும். இப்படியாக செல்போன் ரயிலுக்கு வெளியே விழுந்தால் அவ்வளவு தான் என நினைத்துக்கொண்டிருப்பார்கள்.
 

ஆனால் உண்மையில் ரயிலுக்கு வெளியே செல்போன் போன்ற அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் விழுந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? அந்த பொருளைத் திரும்ப வாங்கவும் வழி இருக்கிறது. முதலில் எல்லோரும் செல்போன், தங்க மோதிரம், செயின் போன்ற விஷயங்கள் ரயிலில் வெளியே தவறி விழுந்துவிட்டால் ரயிலின் சங்கிலியைப் பிடித்து இழுக்க வேண்டும் என நினைப்பார்கள்.

ஆனால் ரயிலை நிறுத்துவதற்கான சங்கிலி என்பது அவசர காலகட்டத்தில் பயன்படுத்தக்கூடியதுதான். செல்போன், தங்கப் பொருட்கள் ரயிலிருந்து கீழே விழுந்து அவசரக்காலமாகக் கருத முடியாது அதனால் நீங்கள் அப்படியாகப் பொருட்கள் விழுந்ததும் நீங்கள் ரயிலின் சங்கிலியைப் படித்து இழுத்தால் உங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

அதான் இல்லை, ரயிலில் பயணிக்கும் போது ஏதாவது அதிக விலை மதிப்பு கொண்ட பொருட்கள் தவறி விழுந்துவிட்டால் நீங்கள் பதறாமல் விழுந்த இடத்தை நினைவில் வைக்கும் படி அருகில் உள்ள எலெக்ட்ரிக் கம்பத்தில் பதிக்கப்பட்டுள்ள நம்பரை நோட் செய்ய வேண்டும். ஒவ்வொரு கம்பியிலும் ஒவ்வொரு நம்பர் வழங்கப்பட்டிருக்கும். இதை நோட் செய்தவுடன் ரயிலில் செயினை படித்து இழுக்காமல் ரயில்வே போலீஸ் கண்ட்ரோல் ரூம் எண் 182 என்ற அவசர உதவி எண்ணிற்கு போன் செய்ய வேண்டும். அவர்களிடம் நடந்த சம்பவத்தை விளக்கி நீங்கள் சென்று கொண்டிருக்கும் ரயில், தற்போது எந்த இரு ஸ்டேஷன்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கிறது, ரயிலின் எண், ரயிலின் நீங்கள் அமர்ந்திருக்கும் பெட்டி மற்றும் இருக்கை எண், நீங்கள் தவற விட்ட பொருள் குறித்த தகவல்களை எல்லாம் தெரிவித்தால் அவர்கள் உங்களுக்கு உதவும் வகையில் நீங்கள் பொருளைத் தொலைத்த இடத்திற்கு அருகில் உள்ள ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் அப்பகுதிக்கு நேரடியாகச் சென்றோ அல்லது அங்கு பணியில் உள்ள ரயில்வே ஊழியர்களைத் தொடர்பு கொண்ட பொருட்களைத் தேட ஆரம்பித்துவிடுவார்

இதற்கிடையில் அந்த பொருளைப் பெற நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலும் உங்களுக்கு அவசர உதவி எண்ணில் பேசும் போதே தெரிவிக்கப்படும். பெரும்பாலும் அடுத்த ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் உள்ள ஒரு ஸ்டேஷனில் உங்களை இறங்கச் சொல்லி இது குறித்து புகாரைப் பதிவு செய்யச் சொல்லுவார்கள். அதற்குள் நீங்கள் சொன்ன பொருளை ரயில்வே போலீசார் தேடிக் கண்டுபிடித்துவிட்டால் அதை உங்களிடம் ஒப்படைத்துவிடுவார்கள். ஆனால் இது விலை உயர்ந்த பொருட்களுக்கு மட்டுமே நீங்கள் செருப்பைத் தவறவிட்டால் அதற்கெல்லாம் போலீசில் புகார் கொடுக்க முடியாது. குறைந்தது அந்த பொருளின் தற்போதைய மதிப்பு ரூ1000த்திற்கு மேல் இருக்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like