1. Home
  2. தமிழ்நாடு

வரலட்சுமி விரதத்தன்று என்ன செய்யலாம்..? என்ன செய்ய கூடாது..?

1

வெள்ளிக்கிழமையில் வாங்க வேண்டிய இந்த மங்கல பொருட்களை வரலட்சுமி நோன்பு அன்று வாங்கி வைத்துக் கொண்டால் செல்வமானது மென்மேலும் பெருகும் என்பது ஐதீகம். எனவே பூஜைக்கு உரிய எல்லா பொருட்களையும் முந்தைய நாட்களில் நீங்கள் வாங்கி வைத்தாலும், ஒரு சில குறிப்பிட்ட பொருட்களை மட்டும் அன்றைய நாளில் வாங்கி வந்து வையுங்கள். அது என்னென்ன பொருட்கள்?

பூஜைக்குரிய மங்கள பொருட்கள் நிறைய தேவைப்படும் என்பதால் அதனை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்வதில் தவறில்லை. ஆனால் அன்றைய நாள் வெள்ளிக்கிழமையில் நீங்கள் இந்த சில பொருட்களை உங்கள் தேவைக்கு ஒன்றிரண்டு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலாவதாக இருப்பது அரிசி. வெள்ளிக்கிழமையில் மகாலட்சுமி பூஜை செய்யும் பொழுது வீட்டில் அரிசி வாங்குவது மிகவும் சிறப்பு.

பூஜைக்கு கட்டாயம் பச்சரிசி பயன்படுத்த வேண்டும். பூஜையில் இருக்கும் அரிசியை கலசத்துடன் பூஜை முடிந்ததும் நீங்கள் வாங்கி வந்த அரிசி பானையில் இறக்கி வைக்க வேண்டும். மகாலட்சுமி அன்னபூரணி உடன் இணையும் பொழுது தனத்திற்கும், தானியத்திற்கு என்றென்றும் குறைவில்லாத வரம் கிட்டும். எனவே அரிசி பானையில் கலசத்தை இறக்கி வைத்து பின்னர் கலசத்தை கலைப்பார்கள். கலசத்திற்கு தண்ணீர் ஊற்றி வைப்பவர்கள், அதில் தங்கம், வெள்ளி, நவரத்தினம் ஆகிய பொருட்களையும் போடுவது வழக்கம். உங்களிடம் இருக்கும் சிறிய மோதிரமோ, மூக்குத்தியோ எதுவாக இருந்தாலும் மகாலட்சுமி பூஜையின் பொழுது அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து கலசத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.

தாம்பூலம் கொடுக்கும் பொழுது குண்டு மஞ்சள் கொடுப்பது மிகவும் நல்லது. எனவே மஞ்சள் தூளை வாங்கிக் கொடுக்காமல் குண்டு மஞ்சளை கொடுங்கள். அடுத்ததாக நீங்கள் வாங்க வேண்டிய பொருட்களில் குங்குமம், சந்தனம் மற்றும் மஞ்சள் கயிறு அன்றைய நாளில் வாங்குவது சிறப்பு. அதே போல பச்சை கற்பூரம் பணத்தை ஈர்க்கும் அற்புத ஆற்றல் படைத்தது. எனவே பச்சை கற்பூரத்தை அன்று வாங்கி வையுங்கள். பூஜை முடிந்ததும் அவற்றைத் துண்டுகளாக்கி நீங்கள் பணம் வைக்கும் இடங்களில் கொஞ்சம் கொஞ்சம் போட்டு வையுங்கள். இதனால் செல்வமானது மென்மேலும் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கல் உப்பு மற்றும் பெரிய நெல்லி இந்த இரண்டிலும் மகாலட்சுமி பூரணமாக வாசம் செய்கிறார். குபேரனுக்கு துன்பம் வரும் பொழுது நெல்லி மரத்தை வளர்க்க சொல்லி இழந்த நாடு, நகரத்தை எல்லாம் திரும்பப் பெற்றுக் கொடுத்தார் நாராயணன். எனவே அன்றைய நாளில் நெல்லிக்காய், கல் உப்பு ஆகியவற்றை வாங்குவது சிறப்பு. தாம்பூலம் கொடுக்க ரவிக்கைத் துணி வாங்கும் பொழுது மஞ்சள் துணி ஒன்றை வாங்குங்கள். வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி நோன்பு நாளில் மஞ்சள் துணி வாங்கி அம்மனுக்கோ அல்லது பூஜை அறைக்கோ பயன்படுத்திக் கொள்வது மிகவும் விசேஷம்.

அதே போல புதிதாக சங்கு வைத்து வழிபட நினைப்பவர்கள் வரலட்சுமி நோன்பு அன்று சங்கு வாங்கலாம். சங்கு வழிபாடு முறையாக செய்வது வேண்டும், எனவே உங்களால் முறையான பூஜைகள் அனுஷ்டிக்க முடியும் என்றால் நோன்பு நாளில் சங்கு வாங்கி வைத்து வழிபாடுகளை துவங்கலாம். மேலும் தாம்பூலம் வைத்து கொடுக்கும் பொழுது சிறிய கண்ணாடி ஒன்றை வைத்துக் கொடுப்பது மிகவும் விசேஷம். இந்த கண்ணாடியையும் நீங்கள் அன்றைய நாளில் வாங்கி கொடுப்பது சிறப்பு. எனவே மேற்கூறிய இந்த பொருட்களை எல்லாம் வெள்ளிக்கிழமையில் காலையிலேயே வாங்கி வைத்து பூஜைகளை துவங்குவது நல்லது.

வரலட்சுமி நோன்பு அன்று செய்ய வேண்டியது

வரலட்சுமி நோன்பு அன்று வீட்டில் காலை நேரமும் மாலை நேரமும் கட்டாயம் விளக்கு ஏற்ற வேண்டும்.

வீட்டில் இருக்கும் பெண்கள் நெற்றியில் குங்குமப்பொட்டு, திருமணம் ஆன பெண்கள் வகுட்டில் குங்கும பொட்டு, தலையில் பூ வைத்துக்கொண்டு தான் இருக்க வேண்டும்.

வீட்டு பக்கத்தில் இருக்கும் ஏதாவது அம்மன் கோவிலுக்கு, கணவன் மனைவி ஒன்றாக சேர்ந்து இருவரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். அம்பாள் கோவிலில் கொடுக்கும் திலகத்தை கோவிலிலேயே அமர்ந்தபடி கணவன், மனைவியின் நெற்றிக்கும், திருமாங்கல்யத்திற்கும் இடுவது ரொம்ப ரொம்ப நல்லது. உங்களுடைய வீட்டில் இந்த வரலட்சுமி வழிபாடு செய்யவில்லை என்றாலும், இந்த ஒரு வழிபாட்டை மட்டுமாவது கோவிலுக்கு சென்று செய்யவும்.

உங்களால் இயன்ற மங்களப் பொருட்களை வாங்கி ஒரே ஒரு பெண்ணுக்காவது தானம் கொடுக்கலாம். மஞ்சள் குங்குமம், வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், கண்ணாடி வளையல், இப்படி ஏதாவது ஒரு பொருளை வாங்கி தானம் செய்வது சிறப்பு. இது வீட்டில் சுபகாரியத் தடைகளை நீக்கும்.

உங்கள் வீட்டில் வரலட்சுமி வழிபாடு செய்யும் பழக்கமே இல்லை என்றாலும் சரி பூஜை அறையில் விளக்கு ஏற்றி, மகாலட்சுமிக்கு ஏதாவது ஒரு நைய் வைத்தியம் வைத்து கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும்.

வரலட்சுமி விரதத்தன்று செய்யக்கூடாதது என்னென்ன..?

வரலட்சுமி விரதத்தன்று வீட்டை மாப் போட்டோ, அல்லது கழுவி துடைக்க கூடாது. ஒட்டடை அடிக்கக் கூடாது. பூஜை அறையை சுத்தம் செய்யக்கூடாது. முந்தைய நாளே இந்த வேலைகளை எல்லாம் முடித்து வைத்துக் கொள்ளுங்கள்.

வீட்டுப் பெண்கள் மாதவிலக்கு ஆகி இருந்தாலும், கணவரையோ அல்லது வேறு யாராவது ஒருவரையோ வீட்டு பூஜை அறையில் விளக்கு ஏற்றவும். இன்று உங்களுடைய வீட்டில் விளக்கு ஏற்றாமல் இருக்கக் கூடாது.

பூஜை முடித்துவிட்டு, கோவிலுக்கு சென்று வந்த பிறகு கூட, வரலட்சுமி விரதத்தன்று அசைவம் சாப்பிடக்கூடாது.

இன்று யாரிடமும் கைநீட்டி கடன் வாங்க கூடாது. கடன் கொடுக்கவும் கூடாது. ரொம்ப ரொம்ப அவசரம் மருத்துவ செலவு அல்லது வேறு ஏதாவது அவச பிரச்சினையாக இருந்தால் மட்டும் அதற்கு இந்த குறிப்பு விதிவிலக்கு.

வீட்டில் இருக்கும் நகைகளை கொண்டு போய் அடகு வைக்க கூடாது. தங்க நகைகளை யாருக்கும் இரவலாகவும் கொடுக்கக் கூடாது.

வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களை வெறும் கையோடு அனுப்பக் கூடாது. உங்களால் முடிந்த மங்களப் பொருட்களை அவர்கள் கையில் கொடுத்து அனுப்ப வேண்டும். வீட்டிற்கு வந்த சுமங்கலி பெண்களை வீட்டில் இருந்து எதுவும் சாப்பிடாமல் வெளியில் அனுப்பக்கூடாது. 1 டம்ளர் தண்ணீராவது கொடுக்கணும்.

நெற்றியில் இட்டுக் கொள்ள குங்குமம் கட்டாயம் கொடுக்கணும். வீட்டில் எந்த மங்கல பொருட்களும் கொடுப்பதற்கு இல்லை என்றால், குங்குமம் பூ மட்டும் கொடுத்தாலும் போதும். நாளைய தினம் வயது முதிர்ந்த தம்பதி சரீரமாக இருக்கக்கூடிய பெரியவர்களின் காலில் விழுந்த ஆசீர்வாதம் வாங்குவது நல்லது.

Trending News

Latest News

You May Like