1. Home
  2. தமிழ்நாடு

கந்தசஷ்டி விரதத்தின்போது செய்ய வேண்டியது... செய்யக்கூடாதது..!

1

முருகன் என்பவர் இந்துக் கடவுளான சிவன்- பார்வதி தம்பதிக்கு மகனாவார். முருகன் இந்திய துணைக்கண்டத்தில் பண்டைய காலம் தொட்டு வணங்கப்படும் ஒரு முக்கிய தெய்வமாக இருந்து வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே, இதனால், இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். மேலும், பழனி மலையில் வசிக்கும் ஆண்டவராகப் போற்றப்படுகிறார்.சங்க காலத்தில் குறிஞ்சி நிலப்பகுதியின் தெய்வமாகப் போற்றப்பட்டார். தமிழர்களின் குறிஞ்சி நிலத்தெய்வமான சேயோன் வழிபாட்டினைச் சைவ சமயம் இணைத்துக் கொண்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். கௌமாரம் முருகன் வழிபாட்டினைச் குறிக்கும். முருகு” என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே, முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். கார்த்திகேயன் என்றால் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவன் என்று பொருள்படும். கந்தபுராணப்படி, சிவன் நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தெய்வீக தீப்பொறிகள் தோன்றின, அவை வாயு மற்றும் அக்னி உதவியுடன் கங்கையில் தனி ஆண் குழந்தைகளாக வளர்ந்தன. அவர்கள் கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டனர், பின்னர் பார்வதி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டனர்.இந்து இலக்கியங்களின்படி அவருக்கு 108 பெயர்கள் இருந்தாலும், அவர் அதிகமான பெயர்களால் அறியப்படுகிறார்.

கந்தசஷ்டி கவசம் ஓதி உணர்ந்து உள்ளம் தெளிய கந்தனாகிய ஞானபண்டிதன் ஞானவேல் தருவான். கந்தனது ஞானவேலால் நம்முள்ளே சூரசம்ஹாரம் கந்தனருளால் ஆறு அசுரர்களும் அழிய, உலகில் களிப்போடு நாம் வாழ முடியும். மனிதனுக்குள் இருக்கும் தீய குணங்கள் அவனது கர்மவினைகளால் ஏற்பட்டு, அதனால் துன்பம் ஏற்படுகிறது. முருகன் நம்முடைய மனதிற்குள் வந்ததும் அவரது வேல், நமக்குள் இருக்கும் தீய அசுரர்களை வதம் செய்வதையே சூரசம்ஹாரம் என்கிறோம். இதனால் சஷ்டி காலத்தில் முருகனை வழிபட்டால், அசுர குணங்கள் அழிந்து முருகனின் அருள் கிடைத்து, உலகில் இன்பமாக வாழ்வோம் என்பது நம்பிக்கை.

கந்தசஷ்டி விரதம் :

முருகப் பெருமானின் அருளை பெறுவதற்கும், வாழ்வில் ஏற்படும் பலவிதமான துன்பங்களிலிருந்து விடுபடுவதற்காகவும் இருக்கப்படுவதே கந்தசஷ்டி விரதம் ஆகும். கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதற்கு புராணங்களில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சூரபத்மனை வதம் செய்தது மட்டுமல்ல, கந்தசஷ்டி கொண்டாடப்படுவதற்கு இன்னும் சில காரணங்கள் என்ற சுவாரஸ்ய தகவல்கள் சொல்லப்படுகின்றன. கந்தசஷ்டி விரதம் என்பது முருகப் பெருமானின் அருளை பெறுவதற்காக இருக்கப்படும் மிக முக்கியமான விரதம் ஆகும். குறிப்பாகக், குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருப்பது வழக்கம். சஷ்டியில் விரதம் இருந்து வழிபட்டால் கந்தனே குழந்தையாகப் பிறப்பான் என்பது ஐதீகம். அதனால், குழந்தை வரம் வேண்டி, அதிகமானவர்கள் கந்தசஷ்டியிலும், மாதந்தோறும் வரும் சஷ்டியிலும் விரதம் இருப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சிவனிடமிருந்து பெற்ற வரத்தால் ஏற்பட்ட ஆணவம் காரணமாகச் சூரபத்மன் தேவர்களுக்குப் பலவிதமான துன்பங்களைக் கொடுத்தான். அவனை வதம் செய்து, தேவர்களை முருகப் பெருமானை காத்த திருநாளே கந்தசஷ்டி திருநாளாகும்.

கந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமையில் துவங்கி, சப்தமி வரை கொண்டாடப்படும் முக்கிய விழாவாகும். இந்த ஏழு நாட்களும் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால், வேண்டியது கிடைக்கும். முருகப் பெருமான், சூரபத்மனுடன் போரிட்டு, வதம் செய்த ஆறு நாட்களையே கந்தசஷ்டி விழாவாக நாம் கொண்டாடுகிறோம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால் சூரபத்மனை வதம் செய்தது மட்டுமின்றி, இன்னும் இரண்டு காரணங்களுக்காகக் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதாக மகாபாரதமும், கந்தபுராணமும் சொல்கின்றன.

இவை மட்டுமில்லாமல் கந்தசஷ்டி தோன்றியதற்கு இரண்டுக் காரணங்களும் உள்ளன:

முதல் காரணம் :

ஒரு சமயம் முனிவர்கள் பலர் ஒன்று கூடி, உலக நன்மைக்காக ஒரு புத்திரனை வேண்டி யாகம் நடத்தினர். இந்த யாகம் ஆறு நாட்கள் நடத்தப்பட்டுள்ளது. யாகத்திலிருந்து தினம் ஒரு வித்தாக ஆறு நாட்களும் ஆறு வித்துக்கள் தோன்றின. இந்த ஆறு வித்துக்களையும் ஒன்றாகச் சேர்க்க ஆறாவது நாளில் முருகப் பெருமான் அவதரித்தார். இவர் அவதரித்த நாட்களையே கந்தசஷ்டி விழாவாக நாம் கொண்டாடுவதாக மகாபாரதம் சொல்கிறது.

இரண்டாவது காரணம் :

கந்தபுராணத்தின் படி, கச்சியப்ப சிவாச்சாரியார் ஐப்பசி மாதம் வளர்பிறையில் தொடர்ந்து 6 நாட்கள் விரதம் இருந்து முருகனை வழிபட்டு, முருகனின் அருளை பெற்றுள்ளார். அசுரர்களின் பிடியிலிருந்து விடுபடுவதற்காகத் தேவர்களும் 6 நாட்கள் முருகப் பெருமானை வழிபட்டுள்ளனர். முருகனை அவர்களைக் காத்ததுடன், தன்னுடைய அருளையும் வழங்கி உள்ளார். இந்தச் சம்பவங்களை நினைப்படுத்தும் விதமாகவே ஐப்பசி மாதம் அமாவாசைக்கு பிறகு 6 நாட்கள் கந்தசஷ்டி விழா கொண்டாடப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
இவையே, கந்தசஷ்டி அன்று பக்தர்கள் முருகப்பெருமானை வணங்கி வருகின்றனர்.

கந்தசஷ்டி கவசம் படித்தால் என்ன பலன்களும், நன்மைகளும் கிடைக்கும்?

முருகனின் அருளை பெறுவதற்கு எத்தனையோ மந்திரங்கள், பாடல்கள் இருந்தாலும் அவற்றில் மிகவும் புகழ்பெற்றதாகவும், பலருக்கும் தெரிந்த ஒன்றுமாக இருப்பது கந்தசஷ்டி கவசம் பாடலாகும். 236 வரிகளைக் கொண்ட இந்தப் பாடல் பாலதேவராய சுவாமிகளால் இயற்றப்பட்டதாகும். இந்தப் பாடல் பக்தர்களைக் கவசம் போல் இருந்து காக்கக் கூடியதாகும். பெரும்பாலனவர்களுக்கும் கந்தசஷ்டி கவசம் என்றால் “சஷ்டியை நோக்க” என்ற பாடல் தான் தெரியும். ஆனால், பாலதேவராய சுவாமிகள் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் தனித்தனியாகக் கந்தசஷ்டி கவசம் இயற்றி உள்ளார்.

சஷ்டியை நோக்க எனத் துவங்கும் பாடல் திருச்செந்தூர் திருத்தலத்திற்கு உரிய பாடலாகும். இதுபோல் மற்ற ஐந்து தலங்களுக்கும் கவச பாடல் உள்ளது.

கந்தசஷ்டி பாடலை எவர் ஒருவர் முருகனை நினைத்து, மனப்பூர்வமாக ஒரு நாளைக்கு 36 முறையோ அல்லது தொடர்ந்து 48 நாட்களோ படித்து வந்தால் அவர்கள் வேண்டியது அனைத்தும் கிடைக்கும். வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றமும், ஏற்றமும் கிடைக்கும் என்பது ஐதீகம். கந்தசஷ்டி கவசம் எனப் பாலதேவராய சுவாமிகள் இந்தக் கவச பாடல்களுக்குப் பெயர் வைத்துள்ளார்.”கந்த” என்றால் ஞானத்தால் அடைந்த உற்சாகம் என்று பொருள். கந்தனது வேல் ஆழ்ந்தும், அகன்றும், கூர்மையான கலிகளை நீக்கும் ஞானசக்தி வேல் ஆகும். கவசம் என்றால் நமது உள்ளத்தையும், உடலையும் காக்கும் கருவியாகும். சஷ்டி என்றால் நமக்கு உள்ளே இருக்கும் ஆறு வகையான பகைவர்களைக் குறிப்பதாகும். அவை,

*ஆசை – மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை, காமாசுரன் என்று ஆசையை அழைப்பதுண்டு
* கோபம் – உள்ளிருந்து நம்மையும் பிறரையும் அழிக்கும் கோபம் மற்றொரு அசுரகுணமாகும்.கோபத்தை கோபாசுரன் என்று அழைப்பதுண்டு.
* லோபம் – பிறருக்கு செல்வத்தைப் பகிர்ந்தளிக்காத லோபி, மிகக் கொடியவன். லோபாசுரன் என்று அழைப்பதுண்டு.
* மோகம் – அறியாமையால் தான் உலகில் துன்பங்கள் மோகம் எனும் அறியாமையே அஞ்ஞானம் ஆகும். மோகமாசுரன் என்று அறியாமையை அழைப்பர்.
* மதம் – நான், எனது என்ற ஆணவச்செருக்கு, நமது மனிதகுலமே நாளும் நாசமடைகிறது. எனவே மதம் பிடித்தவனை ஆணவாசுரன் என அழைப்பர்.
* மாச்சர்யம் – பிறரது வளர்ச்சி கண்டு பொறாமையால் மற்றவர்களைத் துன்புறுத்தும் அசுரகுணம். எனவே மாச்சர்யாசுரன் என்று பொறாமையை குறிப்பிடுவார்கள்.

பக்தர்களைக் காக்கக்கூடிய வேல்:

கந்தசஷ்டி கவசம் ஓதி உணர்ந்து உள்ளம் தெளிய கந்தனாகிய ஞானபண்டிதன் ஞானவேல் தருவான். கந்தனது ஞானவேலால் நம்முள்ளே சூரசம்ஹாரம். கந்தனருளால் ஆறு அசுரர்களும் அழிய, உலகில் களிப்போடு நாம் வாழ முடியும். மனிதனுக்குள் இருக்கும் தீய குணங்கள் அவனது கர்மவினைகளால் ஏற்பட்டு, அதனால் துன்பம் ஏற்படுகிறது. முருகன் நம்முடைய மனதிற்குள் வந்ததும் அவரது வேல், நமக்குள் இருக்கும் தீய அசுரர்களை வதம் செய்வதையே சூரசம்ஹாரம் என்கிறோம். இதனால் சஷ்டி காலத்தில் முருகனை வழிபட்டால், அசுர குணங்கள் அழிந்து முருகனின் அருள் கிடைத்து, உலகில் இன்பமாக வாழ்வோம் என்பது நம்பிக்கை.

கந்தசஷ்டி விரதத்தின்போது செய்யவேண்டியது:

* கந்தசஷ்டி ஆரம்பம் முதல் சூரசம்ஹாரத்திற்கு மறு நாள் நடைபெறும் முருகன் திருக்கல்யாணம் வரை மிக
எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகப்பெருமானின்
சிந்தனையிலேயே விரதம் இருக்க வேண்டும்.
* விரதம் இருப்பவர்கள் குளிர்ந்த நீரில் தினமும் இரண்டு நேரம் குளித்து, வீட்டில் இருக்கும் முருகப்பெருமான்
படத்திற்கு பூ வைத்து, தீபம் ஏற்றி, கற்பூரம் காட்ட வேண்டும்.
* சஷ்டியில் ஏழு நாட்களும் அருகில் உள்ள முருகப்பெருமான் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும்,
கந்தபுராணத்தை கேட்பதும் அவசியம்.
* ஏழு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள். சூரசம்ஹாரம் அன்று மட்டும் எதுவும் சாப்பிடாமல்
இருப்பது நல்லது.
* இரவு தரையில் கம்பளம் விரித்துத் தான் தூங்க வேண்டும்.
* சஷ்டி விரதம் இருப்பவர்கள் தினமும் கந்தசஷ்டி கவசம் படிப்பது சிறந்தது. அப்படி படிக்க முடியாதவர்கள் எப்போதும் மனதில் ஓம் சரவண பவ மந்திரத்தையும், முருகா என்ற திருநாமத்தையும் உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

கந்தசஷ்டி விரதத்தின்போது செய்யக்கூடாதது:

* சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் எக்காரணம் கொண்டும் அசைவ உணவு சாப்பிடக் கூடாது.
* யாரையும் திட்டவோ, கோபமாகப் பேசவோ கூடாது.
* முடிந்த வரை காலணியைத் தவிர்ப்பது நல்லது.
* அதிகமாகப் பேசுவதை தவிர்த்து, மனதிற்குள் முருக சிந்தனையிலேயே இருக்க வேண்டும்.
* பகலில் தூங்குவதும், காலையில் தாமதமாக எழுவதையும் தவிர்க்க வேண்டும்.

Trending News

Latest News

You May Like