1. Home
  2. தமிழ்நாடு

ஆளுநர் சித்தரிக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது : விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன்..!

1

இந்த ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று (திங்கள்கிழமை) கூடிய நிலையில், தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்தார்.

முன்னதாக, சில நிமிடங்கள் மட்டுமே உரை நிகழ்த்திய ஆளுநர் ரவி, தனது உரையின்போது, “நான் திரும்பத் திரும்ப விடுக்கும் கோரிக்கையும், அறிவுரையும் இதுதான். தேசிய கீதத்துக்கு மரியாதை கொடுத்து தேசிய கீதத்தை கூட்டத்தின் தொடக்கத்திலும், முடிவிலும் இசைக்க வேண்டும்.” என்றார்.

ஆளுநரின் தேசிய கீதம் குறித்த இந்த கருத்துக்கு விளக்கம் அளித்த சபாநாயகர் அப்பாவு, “ஆளுநர் தேசிய கீதம் குறித்து அவையில் ஒரு கருத்தை கூறினார். அதுதொடர்பான விவரங்களை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தேசிய கீதம் இசைப்பது குறித்து கடந்தாண்டே எனக்கு ஆளுநர் கடிதம் எழுதி, அந்தப் பிரச்சினை ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டது.

இன்றைய நிகழ்வில் ஆளுநர் உரை என்பது அரசமைப்பு சட்டத்தின்படி ஆளுநருக்கு உள்ள கடமை. அந்த கடமையை நிறைவேற்ற ஆளுநர் இன்று பேரவைக்கு வருகை தந்தார். இப்பேரவை எப்போதும் மரபுகளை மதித்து பின்பற்றி வருகிறது. அந்த வகையில் ஆளுநர் உரையின் தொடக்கத்துக்கு முன்பு தமிழ்த்தாய் வாழ்த்தும், உரை முடிவின்போது தேசிய கீதமும் பாடப்பட்டு வருகிறது என்பதை கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்” என்றார். பின்னர், சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு கூட்டத்தொடரின் முதல்நாள் நிறைவு பெற்றது.

இந்நிலையில், விசிக சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் பேசியதாவது,தேசிய கீதத்தை ஒருமுறை பாடினால் தேச பக்தி இல்லை என்பது போலவும், இரு முறை பாடினால் தேச பக்தி அதிகம் என்பது போலவும் ஆளுநர் சித்தரிக்க நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது” 

அதே போல், சட்டத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, கேரள ஆளுநர் 2 நிமிடம் உரையை வாசித்தார், தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை தென் மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் மக்கள் நலனுக்கு எதிராக உள்ளது. தென் மாநில ஆளுநர்களின் நிலைப்பாடு ஆளும் மாநில அரசுகளுக்கு எதிராகவே உள்ளது"என்றார் .

தமிழ்நாடு ஆளுநர் ரவி உரையை வாசிக்காமல், அவரது சொந்த கருத்துகளை மட்டுமே பேசிவிட்டு சென்றுள்ளார். அரசின் உரையில் ஏதாவது சந்தேகம் இருந்திருந்தால் கேட்டு தெரிந்துகொண்டு இருந்திருக்கலாம். அதை விட்டுவிட்டு உண்மைக்கு மாறாக இருக்கிறது, பொய்யாக இருக்கிறது என்று கூறுகிறார். இதற்கும் நாங்கள் விளக்கம் கொடுக்க தயாராக இருக்கிறோம். தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதை புள்ளி விவரங்களோடு சுட்டிக்காட்டியும் அதை ஏற்கும் மனப்பக்குவமும், தாங்கிக்கொள்ளும் சக்தியும் ஆளுநருக்கு இல்லை. 

பல துறைகளில் முதலிடத்தில் வந்து இருக்கிறோம். அதை ஏற்றுக்கொள்ள மனம் இல்லாமல், படிக்க மனம் இல்லாமல் இந்த அரசின் சாதனைகளை தான் வாசிக்க விருப்பமில்லை என தெரிவித்து பொய்யான கருத்துகளை கூறி வெளிநடப்பு செய்துள்ளார். ஆளுநர் மரபுகளை மீறியபோதும் ஜனநாயகப்படி செயல்பட வேண்டும் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருக்கிறார். 

  

Trending News

Latest News

You May Like