1. Home
  2. தமிழ்நாடு

ஆன்மிகமும் அறிவியலும் என்ன சொல்கிறது : இந்த ஆடி மாதத்தில் புதுமண தம்பதிகளை பிரிப்பது ஏன்?

1

ஆடி மாத சிறப்புகள்

இம்மாதத்தில் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட நம் முன்னோர்கள் சில வழிபாடுகளை ஏற்படுத்தினர். அதுவே ஆடிப்பெருக்கு. இதன் நோக்கம் உடலும் மனமும் உழைக்க வேண்டும் என்பதே.

எனினும் இக்காலங்களில் புதுமணத் தம்பதிகள் பிரித்து வைக்கப்படுகின்றனர். சுபமுகூர்த்த நிகழ்ச்சிகளும் நடைபெறுவதில்லை. பல கிராமங்களில் கைகளில் காப்பு கட்டி விரதம் இருந்து திருவிழா நடத்துகின்றனர். மஞ்சள் தண்ணீர் கூல் போன்றவையும் ஊற்றப்படுகின்றன.

ஆடி பௌர்ணமி விரதம்

ஆடி மாதத்தில் வரும் பௌர்ணமி சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால் அன்றைய தினம் பெண்கள் விரதம் இருந்து வீட்டிலோ அல்லது கோயிலுக்கோ செல்ல வேண்டும். வீட்டில் அம்மன் படங்களுக்கு பூஜை நடத்தலாம்.

ஆடி பௌர்ணமி தினத்தில் அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வாழைப்பழம் கலந்த சாதத்தை நைவேத்தியம் செய்து வழிபாடு செய்வது நல்லது. பெண்கள் ஆடி விரதம் மேற்கொண்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்றும் குடும்பத்தில் மகிழ்ச்சி மேலோங்கும் என்றும் வியாபார தடைகள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது.

குத்து விளக்கேற்றுதல்

இத்தினத்தில் பொதுவாக அம்மனுக்கு புடவை சாற்றி வழிபட்டால் நிறைய நற்பலன்களை அடையலாம் என்றும் ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆடி மாத செவ்வாய்கிழமைகளில் இரண்டு குத்துவிளக்குகளில் பஞ்ச தீப எண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றுவது நல்லது.

திருமணம் கூடாது:
ஆடி மாதம் முழுவதும் இறைவனை நினைத்து தினமும் வணங்கி வழிபடுவதற்காக, அவரை தவிர வேறு எண்ணங்கள் வரக்கூடாது என்பதற்காக திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப காரியங்கள் இந்த மாதத்தில் நாம் செய்வதுகிடையாது. இதனால் ஆடி மாதம் மிகவும் மங்களகரமான மாதமாக இருந்தாலும் சுபகாரியங்கள் நடத்தப்படுவதில்லை.

தாம்பத்தியம் வைக்கக் கூடாது?
அதே சமயம் தம்பதிகள் இறைவனை முழுமதார வழிபடுவதற்காக தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கூறுகின்றனர். இன்றும் கிராமத்தில் புதுமணத் தம்பதிகள் ஆடி மாதம் தொடங்கியதும் பெண் அவளது பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விடுவது வழக்கமாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் ஆடி மாதத்தில் தம்பதிகள் சேர்ந்தால் சித்திரை மாதம் குழந்தை பிறக்கும். சித்திரை மாதத்தில் வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதம் பிரசவத்திற்கு ஏற்ற மாதமாக இல்லை என்பதால், திருமணமான பெண்ணை ஆடி மாதத்தில் பெற்றோர்கள் தங்கள் வீட்டிலேயே தங்க வைக்கின்றனர்.

கோடையில் குழந்தை பிறந்தால் கத்திரி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் பிறக்கும் பிள்ளைக்கும், பிரசவிக்கும் தாய்க்கும் ஆரோக்கியத்தில் பிரச்சனைகள் வரும்.. அதனால்தான் புதுமணத் தம்பதியர் பிரித்து வைக்கப்படுகிறார்கள் என்று அறிவியல் ரீதியாகவும் காரணம் சொல்லப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இவை அனைத்தும் நம் முன்னோர்கள் பின்பற்றிய நம்பிக்கைகள் அது தெரிந்தவர்கள் இன்னும் இதனை பின்பற்றி வருகிறார்கள். எனக்கு தெரிந்தவரை ஆடி மாதம் சாகுபடி செய்வார்கள் ஏழைகள் கையில் கொஞ்சம்தான் பணம் இருக்கும்.. அதனால் அந்தகாலத்தில் சேர்த்து வைத்த பணத்தையும் சேர்த்து தள்ளுபடில கிடைக்கிற ஜவுளி , ஏதுவான பொருட்கள் வாங்க சிறந்த மாதம் ஆடி மாதம்..ஆதலால் ஆடி மாதம் முடிந்து உடனேயே வரும் ஆணி மதத்தில்தான் திருமணம் நடத்துவார்கள்.. ஆடி மாதம் கோவில்களுக்கு சிறந்த மாதம் ஆதலால் ஒருசிலர் விரதம் முறைகளை பின்பற்றலாம் ஆதலால் ஆணியில் திருமணம் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்..

பணம் இல்லை:அதுமட்டுமில்லாமல் திருமணம் என்றால் சற்று செலவு அதிகரிக்கும். அதனால் உழவு தொழில் முக்கியமான தொழிலாக இருந்த காலத்தில், விவசாயத்திற்கு என்று ஒதுக்கி வைத்திருக்கும் பணத்தை திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு செலவிட்டால், அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடிய சூழல் உருவாகும்.

Trending News

Latest News

You May Like