அழிக்க வேண்டியது அநீதியைத்தான்.. உயிர்களை அல்ல.. கவிஞர் வைரமுத்து கோபம் !

கடும் எதிர்ப்புக்கு மத்தியில் நாளை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் தேர்வை நடத்த வேண்டாம் என சில மாநில அரசுகள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்புகள், திரை பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இருப்பினும், திட்டமிட்டப்படி நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என்ற முனைப்பில் மத்திய அரசு தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
தமிழகத்தில் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் சோகம் ஏற்பட்டு வருகிறது. நாளை நடைபெறவுள்ள நிலையில் மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன் ஜோதி ஸ்ரீ துர்கா, தான் கைப்பட எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றினர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து அவரது ட்விட்டர் பதிவில், இரங்கல் கவிதை வடித்துள்ளார்.
ஓ! மாணவ மகன்களே! மகள்களே! நீட் என்பது தேர்வுமல்ல; தற்கொலை என்பது தீர்வுமல்ல. பிறக்கும் யாருக்கும் தங்களை அழிக்கும் உரிமை இல்லை. அழிக்க வேண்டியது அநீதியைத்தான்; உயிர்களை அல்ல. நீட் தேர்வு என்பது சமூக அநீதி; முதலில் அதை அழிப்போம். நீங்கள் வாழப் பிறந்தவர்கள். என்று தெரிவித்துள்ளார்
ஓ!
— வைரமுத்து (@Vairamuthu) September 12, 2020
மாணவ மகன்களே! மகள்களே!
நீட் என்பது தேர்வுமல்ல;
தற்கொலை என்பது தீர்வுமல்ல.
பிறக்கும் யாருக்கும் தங்களை
அழிக்கும் உரிமை இல்லை.
அழிக்க வேண்டியது அநீதியைத்தான்;
உயிர்களை அல்ல.
நீட் தேர்வு என்பது சமூக அநீதி;
முதலில் அதை அழிப்போம்.
நீங்கள் வாழப் பிறந்தவர்கள்.#NEET #BanNEET
newstm.in