1. Home
  2. தமிழ்நாடு

நீங்கள் என்ன மொழியியல் வல்லுநரா..? கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கர்நாடக உயர்நீதிமன்றம் கெடு!

Q

கர்நாடக மாநிலத்தில் தக்லைப் படம் திரையிடக்கூடாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மீறி திரையிடப்பட்டால் திரையரங்கம் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனிடையே, இதற்கு கமல்ஹாசன் பதில் அளித்திருந்தார். அதில், அன்பு என்றும் மன்னிப்பு கேட்காது என்று பதில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கர்நாடகத்தில் தக் லைப் திரைப்படும் திரையங்கங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசனுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது. இதில், நீங்கள் என்ன வரலாற்று ஆய்வாளரா, கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்னை முடிந்திருக்கும்.

கமல்ஹாசனாக இருந்தாலும், யாராக இருந்தாலும் மக்களின் உணவுகளை புண்படுத்தக்கூடாது, இதுபோல பேசியிருக்கக் கூடாது, தமிழில் இருந்து கன்னடம் பிரிந்ததாக எதன் அடிப்படையில் பேசினீர்கள், மன்னிப்பு கேட்பதில் கமலுக்கு என்ன பிரச்னை, நீங்கள் என்ன மொழியியல் வல்லுநரா..?

மக்கள் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது, கமல்ஹாசனால் சமூக நல்லிணக்குத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை கர்நாடக உயர்நீதிமன்றம் எழுப்பி உள்ளது. மேலும், கமல்ஹாசன் இன்று (ஜூன் 3) மதியம் 2.30 மணிக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கெடு விதித்துள்ளது. மேலும், இந்த வழக்கில் இன்று தீர்ப்பும் வழங்கப்பட உள்ளது.

இதுதொடர்பாக கர்நாடக வர்த்தக சபை தலைவர் நரசிம்மலுவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கடிதம் எழுதி உள்ளார். அதில், கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் இல்லை. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற நோக்கத்தில் பேசினேன். ஆனால், அது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. கன்னட மொழி மீது மிகுந்த மரியாதை உள்ளது. மக்களுக்கு இடையே இணைப்பு பாலமாக சினிமா இருக்க வேண்டுமே தவிர பிரிக்கும் பாலமாக இருக்கக் கூடாது. ஒரு மொழி மீது மற்றொரு மொழி ஆதிக்கம் செலுத்துவதை எதிர்த்து வருகிறேன்.

இந்த புரிதல் தற்காலிகமானது. இது நிரந்தரம் இல்லை. நமது பரஸ்பர உறவு, கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த விவாதமோ, சர்ச்சையோ கிடையாது. சிவராஜ்குமார் மீது அன்பாக பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. சிவராஜ்குமார் சில அவமானங்களை சந்தித்துள்ளது எனக்கு தர்மசங்கடமாக உள்ளது. பொது அமைதி, விரோதத்துக்கு ஒரு போதும் அனுமதித்தது இல்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like