KPY பாலா செய்த செயல் : காலில் விழுந்த மாற்றுத்திறனாளி..!
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்கு பின்னர் விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் போட்டியாளராகவும் களமிறங்கி கலக்கி வருகிறார் நடிகர் பாலா. சின்னத்திரையில் கிடைத்துவரும் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திவரும் பாலா, சினிமாவிலும் காமெடி நடிகராக பல படங்களில் நடித்திருக்கிறார். புலிகுத்தி பாண்டி, நாய் சேகர் ரிட்டன்ஸ், காக்டெயில், தும்பா, ஜுங்கா ஆகிய பல படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
சமீபகாலமாக பாலாவின் காமெடி பேசப்படுகிறதோ இல்லையோ, இவர் செய்துவரும் மக்கள் பணி பேசப்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணத்தில் பிறருக்கு பெரும் வகையில் உதவி செய்துவரும் பாலாவை பாராட்டாத ஒருவரும் இருக்கமுடியாது. ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி, முதியோர்களுக்கு வெண்டிலேட்டர் வசதியோடு ஆம்புலன்ஸ் என பல வேலைகளை செய்திருக்கிறார் பாலா.
இந்த எம்சிஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவர் பைக் இல்லாததால், வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதை அறிந்த பாலா, அவருக்கு தன் சொந்த செலவில் ஸ்கூட்டி ஒன்றை வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல், அதை வீட்டுக்கே சென்று டோர் டெலிவரியும் செய்துள்ளார். பாலா செய்த இந்த பேருதவியால் எமோஷனல் ஆன அந்த மாற்றுத்திறனாளி இளைஞர், கண்ணீர்மல்க காலில் விழுந்தது காண்போரை கலங்க செய்துள்ளது.