1. Home
  2. தமிழ்நாடு

என்ன மனுஷன் டா நீ..? சகோதரியின் அரை நிர்வாணம் படம் எடுத்து மிரட்டி மயக்க மருந்து கொடுத்து ..!

1

சென்னையை சேர்ந்தவர் ரிஸ்வான் (39). இவரது 19 வயது மகள், 9ம் வகுப்பு வரை படித்து, தந்தையின் கடையில் வேலை பார்த்து வந்தார். இதே கடையில் முகமது ரிஸ்வானின் தம்பி மகன் ஆஷ் முகமது கடந்த 2 ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வந்தார்.

இதற்கிடையில் ஆஷ் முகமது பெரியப்பாவின் மகளை அரை நிர்வாணமாக படம் எடுத்ததாக தெரிகிறது. அந்த புகைப்படத்தை காட்டி ஆஷ் முகமது மிரட்டி வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன், மும்பை சென்றிருந்த ஆஷ் முகமது, அந்த இளம்பெண்ணுக்கு போன் செய்து மிரட்டியுள்ளார். மேலும் பணம் மற்றும் நகைகளுடன் மும்பைக்கு வர வேண்டும் என்றும், அதன் பிறகு தான் அரை நிர்வாண புகைப்படத்தை நீக்குவதாகவும் கூறியுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய இளம்பெண் கடந்த ஜூன் 24ம் தேதி வீட்டில் இருந்த நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு மும்பை சென்றார். அங்கு ஆஷ் முகமது மயக்க மருந்து கொடுத்து இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனிடையே, பீதியடைந்த பெற்றோர், விருகம்பாக்கம் மகளிர் காவல் நிலையத்தில் மகளிடம் புகார் அளித்ததையடுத்து, போலீஸார் விசாரணை நடத்தினர்.

பின்னர் ஜூன் 28 அன்று, காணாமல் போன இளம்பெண் மும்பையின் குர்கான் ரயில் நிலையத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டபோது, ​​​​அவளுடைய பெற்றோர் அங்கு சென்று பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டில் இருந்த இளம்பெண் மறுநாள் தற்கொலைக்கு முயன்றார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், மகளிடம் என்ன நடந்தது என விசாரித்தனர். மகள் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்தும், தனது  சித்தப்பா மகன் ஆஷ் முகமது தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததையும் பெற்றோரிடம் கூறியுள்ளார். போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு பூந்தமல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ​​பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

குற்றச்செயல்களில் ஈடுபட்ட ஆஷ் முகமது தெலுங்கானாவில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் மற்றும் காவலர் கண்ணன் ஆகியோர் தெலுங்கானா விரைந்து மதுரவாயலை சேர்ந்த ஆஷ் முகமதுவை கைது செய்தனர். அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Trending News

Latest News

You May Like