ஆளுநர் அரசியல் பேசுனா என்ன தப்பு? தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி..!

ஆளுநர்கள் அரசியல் பேசக்கூடாது என பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கூறிவந்தனர். இந்நிலையில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், “ஆளுநர் பதவி என்பது போஸ்டர் ஒட்டி கண்டிக்கக் கூடியது அல்ல. ஆளாளுக்கு அரசியல் பேசும்போது ஆளுநர் அரசியல் பேசக்கூடாதா?. ஆட்சி நிர்வாக தலைவர்களான ஆளுநர்கள் அரசியல் பேசலாம். ஆளுநருக்கு எதிராக கருத்து இருந்தால் கூறுங்கள், கறுப்புக்கொடி, கண்டன போஸ்டர் ஒட்டுவது முறையானது அல்ல. அரசியல் இல்லாமல் எதுவும் கிடையாது, அரசியல் தலைவர்கள் அரசியல் பேசும்போது, ஆட்சி தலைவர்களும் அரசியல் பேசலாம்.
காவல்துறையினர் மத்தியில் காணப்படும் மன அழுத்தத்தை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம். தற்கொலை எதற்குமே தீர்வு கிடையாது. காவலர்கள் சங்கம் அமைத்து தங்கள் கோரிக்கையை அரசிடம் தெரிவிக்க வேண்டும். டி.ஐ.ஜி விஜயகுமாரின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பதையும் கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறினார்.