என்ன டிரம்ப் சார் இது..! “பென்குயின்களுக்கும் 10% வரியாம்” ..!

அதிபர் ட்ரம்ப் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அறிவித்த புதிய வரி விதிப்புகள் உலக நாடுகளின் பொருளாதாரத்துக்கு சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில், அதிலும் ஒரு அதிசயமான அறிவிப்பு இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ட்ரம்ப் அறிவித்த 10% வரி, அண்டார்க்டிகாவில் உள்ள மக்கள் இல்லாத எரிமலைத் தீவுகள் மீது விதிக்கப்பட்டுள்ளது. இந்த தீவுகளில் பென்குயின்கள், கடற்புலிகள் மற்றும் பனிக்கட்டிகள் மட்டுமே இருக்கிறது. அத்துடன், ஆஸ்திரேலியாவும் இந்த வரி பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் மீம்ஸ் புயலை உருவாக்கியுள்ளது. ட்ரம்ப் மற்றும் பென்குயின்களை வைத்து வெகுவேறு காமெடி மீம்கள் X வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒரு மீமில் ‘No Tarifs’ என பதாகைகளை பிடித்து பேன் குயின்கள் போராடும் காட்சியும், மற்றொன்றில் “Peace Was Never An Option” எனக் கூறும் கோபமான துப்பாக்கியுடன் இருப்பதையும் காணலாம். மேலும், Heard தீவு மற்றும் McDonald தீவிலிருந்து பென் குயின்கள் பைகளை கொண்டு வெளியேறும் வீடியோவும் “இதற்கு தான் நாங்கள் வாக்களித்தோமா” என கேட்கும் பதிவும் வைரலாகி வருகிறது.
Donald Trump slapped a 10% tariff on the uninhabited Heard and McDonald Islands near Antarctica…
— Ben Lincoln (@realBenLincoln) April 2, 2025
Seriously? No one even lives there.
What a joke! pic.twitter.com/pKu7CqJLbJ
மேலும், ட்ரம்ப் 2,000 பேர் வாழும் சதுப்பு நிலத்தில் தென் பசிபிக் தீவான Norfolk Island மீது கூட 29% வரி விதித்துள்ளார். அந்த தீவு அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்வதே இல்லை. இருந்தாலும், வரி அறிவிப்பால் நகைச்சுவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதனையடுத்து, ட்ரம்பின் வரி அறிவிப்புகள் ஒரு பார்வையில் சீரியசான பொருளாதார விஷயமாக இருந்தாலும், இன்னொரு பார்வையில் மீம்களின் உலகத்தில் ஒரு காமெடிக்களமாக மாறி வருகிறது.