1. Home
  2. தமிழ்நாடு

இதென்ன ஸ்கூலா…? இல்ல வீடா…? வகுப்பறையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்த ஆசிரியர்..!

1

உ.பி மாவட்டத்தில் ஒரு பள்ளியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஆரம்பப் பாடசாலையில் பணியாற்றும் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா குறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. உத்திரபிரதேச மாநிலத்தின் புலந்த்ஷேர் மாவட்டம் முந்தக்கேடாவில் உள்ள பாடசாலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அந்த வீடியோவில், மாணவர்கள் வகுப்பில் இருக்கும்போது ஆசிரியை தனது தலைமுடிக்கு எண்ணெய் தடவியதுடன், கைபேசியில் கிளாசிக்கல் இசையை ஓடவிட்டும் காணப்படுகிறார். இது கல்வித்துறையின் கடுமையான விமர்சனத்தையும், பொதுமக்களின் எதிர்வினைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பள்ளிக்கு வந்த மாணவர்களின் பெற்றோர்களுடன் ஆசிரியை மோசமாக நடந்து கொண்டதுடன், கம்பியால் அடித்ததாகவும் புகார் எழுந்துள்ளது.

இதையடுத்து மாவட்ட அடிப்படை கல்வி அதிகாரி டாக்டர் லஷ்மிகாந்த் பாண்டே, இந்த சம்பவத்தை சமூக வலைதளங்கள் மூலமாக தெரிந்து கொண்டு, தனிப்பட்ட விசாரணை அலுவலரை நியமித்து விசாரணையைத் துவக்கியுள்ளார். அதற்குமுன்னர் ஆசிரியை சங்கீதா மிஸ்ரா பணிநீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like