இது என்ன புது ட்விஸ்ட்..! தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு..!

அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் போன்றவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்துள்ளது.
இந்நிலையில், அதிமுக (ஓபிஎஸ்) என்ற பெயரில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அங்கீகரிக்கும் ஏ, பி படிவங்களில் கையெழுத்திட ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர்களின் சின்னம் குறித்த படிவத்தில் கையெழுத்திட ஓபிஎஸ்சுக்கு அனுமதி வழங்காவிட்டால் இரட்டை இலை சின்னத்தை நிறுத்தி வைத்து இரண்டு தரப்புக்கும் பொதுவான சின்னங்களை வழங்க வேண்டும் எனவும் ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், லோக்சபா தேர்தலில் அதிமுகவின் இரு அணிகளையும் பொது சின்னத்தில் போட்டியிட உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.