1. Home
  2. தமிழ்நாடு

இது என்ன நியாயம்..? ஆங்கில பாடப்புத்தகங்களில் தலைப்புகள் எல்லாம் இந்தியில் - எம்.பி சு.வெங்கடேசன் ஆவேசம்..!

Q

ஆங்கில-நடுத்தர பாடப்புத்தகங்களில் இந்தி தலைப்புகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் கேரள பொதுக்கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) ஆங்கில-நடுத்தர பாடப்புத்தகங்களுக்கு இந்தி தலைப்புகளைப் பயன்படுத்துவதற்கான முடிகை கடுமையாக விமர்சித்தார்.
மத்திய அரசின் இந்த முடிவு ஒரு கடுமையான பகுத்தறிவின்மை மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையைக் குறைக்கும் கலாச்சாரத் திணிப்பு என்று விளாசினார். மாணவர்களிடையே உணர்திறன் மற்றும் புரிதலை வளர்க்கும் நீண்டகால ஆங்கிலத் தலைப்புகளை 'மிருதன்-கம்' மற்றும் 'சந்தூர்' போன்ற இந்தி தலைப்புகளுடன் மாற்றுவது பொருத்தமற்றது எனவும் விமர்சித்தார்.
பாடப்புத்தக தலைப்புகள், வெறும் லேபிள்கள் அல்ல என்றும் அவை, மாணவர்களின் கருத்துக்களையும் கற்பனையையும் வடிவமைக்கின்றன என்றும் கூறிய அமைச்சர் சிவன்குட்டி, எனவே, ஆங்கில-நடுத்தர பாடப்புத்தகங்களில் ஆங்கில தலைப்புகள் இடம்பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்து திரும்பப் பெறுமாறு NCERT-க்கும் அவர் வலியுறுத்தினார்
இந்நிலையில் அந்த செய்தியை மேற்கொள் காட்டி, மதுரை எம்பி சு வெங்கடேசன் இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ஆங்கில வழி பாடநூல்களின் தலைப்புகள் எல்லாம் இந்தி எனவும் ஆங்கிலத்தில் கடிதம் எழுதினால் அமைச்சர்களின் பதில்கள் இந்தியில் தான் வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என்.சி.இ.ஆர்.டி. துவங்கி எம். பிக்களுக்கு எழுதப்படும் பதில் வரை நாள்தோறும் இந்தித் திணிப்புதான் என்றும் சு வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ள எம்பி சு வெங்கடேசன், இனிமேல் எடப்பாடியார் என்பதை இந்தியில்தான் நயினார் நாகேந்திரன் எழுதுவாரா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் இனி இந்தியில்தான் பதில் அளிப்பாராக என கேட்டுள்ளார் எம்பி சு வெங்கடேசன்.

Trending News

Latest News

You May Like