இது என்ன நியாயம்..! நடிகை கஸ்தூரியை தனிப்படை அமைத்து பிடித்த இந்த அரசாங்கம் இசைவாணியை கைது செய்யாதது ஏன் ?
தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் பேசியதாவது, கடந்த நான்கு நாட்களாக சமூக வலைதளங்களில் இந்து விரோத கருத்துக்கள் வந்து கொண்டிருப்பது வன்மையாக கண்டிக்க தக்க செயல். கார்த்திகை மாதம் தொடங்கியுள்ளது. சபரிமலைக்கு மாலையிட்டு பக்தர்கள் செல்லும் இந்த நேரத்தில் ஐயப்பனை பற்றி கேலியும் கிண்டலுமாக இசைவாணியும் பிறவி இந்து விரோதி ரஞ்சித்தும் பேசி இருக்கிறார்கள்.
தமிழக காவல்துறை உடனடியாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏனென்றால் மிக மோசமான சூழ்நிலை வந்து கொண்டிருக்கிறது. பல பேர் என்னிடம் தொலைபேசியில் அழைத்து ஐயப்பனை பற்றி பேசினால் நாங்கள் ஏசுவை பற்றி பேசுவோம் என்று கூறுகிறார்கள். அது தப்பு. அதை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை. மோதல்களை ஏற்படுத்த சில தீய சக்திகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன,
கஸ்தூரியை பிடிக்க இரண்டு தனிப்படைகளை அமைத்த இந்த அரசாங்கம் இசைவாணியை பிடிக்க ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அப்படி என்றால் தமிழக காவல்துறையே இந்து விரோதப் போக்குடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது. இந்த அரசாங்கம் இந்து விரோத அரசாங்கம் என்பது நமக்குத் தெரியும். இந்த மாநிலத்தின் துணை முதல்வர் உதயநிதி ஸ்டபாலின் சனாதன தர்மத்தை டெங்கு மலேரியா போல் அழிக்க அழிக்க வேண்டும் என்று பேசிய இந்து விரோதி.
அதே போல் காவல்துறையும் இந்து விரோதத்துடன் உள்ளதா என்று தெரியவில்லை. நாளை மற்ற மத தெய்வங்களைப் பற்றி பாட்டு பாடுவது டான்ஸ் ஆடுவது என்ற சூழல் வந்தால் தமிழகத்தில் மத மோதல்கள்தான் வரும் ஆகையால் இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார் ஹெச் ராஜா. மேலும் பேசிய அவர், சபர்மதி ரிப்போர்ட் திரைப்படத்தை பாராட்டினார்.
இதுபோன்ற படங்களை அனைவரும் வரவேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் மக்கள் கோபப்பட்டால் என்ன நடக்கும் என்பதை மகாராஷ்டிர தேர்தல் காட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் 200 தொகுதிகளுக்கு மேல் எந்த கூட்டணியும் வெற்றி பெற்றதில்லை. ஆனால் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு 233 தகுதிகளில் வெற்றி கிடைத்துள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார்.