1. Home
  2. தமிழ்நாடு

திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர இவர்கள் செய்த தவறென்ன?

1

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,தனது எக்ஸ் தளத்தில் கைது செய்யப்பட்ட செவிலியர்கள் அனைவரையும் விடுவிக்கக்கோரி வலியுறுத்தி உள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவில், ஒப்பந்த மருத்துவர்களும், செவிலியர்களும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற திமுக தேர்தல் அறிக்கையின் 356 ஆவது வாக்குறுதியின் படி,  ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் கடந்தும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்காமல் துரோகம் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்திய செவிலியர்களை, அடாவடியாக கைது செய்துள்ள திமுக அரசு.ஏற்கனவே, வாக்குறுதி எண் 181ல், பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று கூறி ஏமாற்றி, அவர்களையும் கைது செய்திருந்தது. திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரியதைத் தவிர, இவர்கள் செய்த தவறென்ன? உடனடியாக, கைது செய்தவர்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டுமென்றும், என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். 


 


 

Trending News

Latest News

You May Like