தேங்காய் அழுகி போனது போல் கனவு கண்டால் என்ன பலன்?

தேங்காய் கனவில் வந்தால் வாழ்வில் முன்னேற்றம் அடைந்து ஒரு நல்ல நிலைமைக்கு வருவீர்கள். தொழில் செய்பவர்களாக இருந்தால் தொழிலில் ஏற்பட்டுள்ள நஷ்டங்கள் நீங்கி லாபம் கிடைக்கும்.உடல் நிலையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது கூடிய விரைவில் சரியாகிவிடும்.
அழுகிய தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
தேங்காய் நம் வீட்டில் சாமி கும்பிடும் போது அல்லது கோவிலில் படைக்கும் போது அழுகி இருந்தால் மட்டும்தான் கெட்ட சகுனம் என்று சொல்வார்கள். ஆனால் தேங்காய் அழுகிருப்பது போல் கனவில் வந்தால் அது நல்ல சகுனம் தான்.நீங்கள் செய்யும் செயல்களில் வெற்றி கிடைக்கும்.
உடைத்த தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
உடைத்த தேங்காய் கனவில் வந்தால் நீண்ட நாட்களாக உங்களுக்கு நிறைவேறாத ஆசைகள் ஏதோ ஒன்று இருக்கும் அந்த ஆசைகள் இப்போது நிறைவேற போகிறது என்று அர்த்தம்.
முழு தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்
முழு தேங்காய் கனவில் வந்தால் ஒரு புதிய முயற்சியில் இறங்க போகிறீர்கள் அந்த முயற்சியில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைத்து இருந்தால் இப்போது தொடங்கலாம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால்
தேங்காய் உடைப்பது போல் கனவில் வந்தால் உங்களின் நீண்ட நாள் ஆசை ஏதோ ஒன்று நிறைவேற போகிறது என்று அர்த்தம்.அந்த ஆசை எதுவாக வேண்டும் ஆனாலும் இருக்கலாம்.
இளநீர் கனவில் வந்தால் என்ன பலன்:
இளநீரை கனவில் பார்த்தால் உங்களுக்கோ அல்லது உங்களை சேர்த்தவர்களுக்கோ ஏதேனும் ஆரோக்கிய கோளாறுகள் இருந்தால் அவர்களுக்கு பூராமனாக குணமாகும் என்பதை குறிக்கிறது என்று அர்த்தம்.
நீங்கள் மரத்தின் மீது ஏறி இளநீர் பறிப்பது போல் கனவு கண்டால் நீண்ட நாட்களாக நினைத்த காரியம் விரைவில் முடிய போகிறது என்று அர்த்தம்.
தேங்காய் உரிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்:
நீங்கள் எடுத்து செய்யப்போகும் செயல்களில் எதோ ஒன்றில் புதிய முயற்சிகளை எடுக்க போகிறீர்கள் என்றும் அதற்கு மனதில் நல்ல வலிமையையும் கிடைக்கும் என்றும் அர்த்தமாம்.
மட்டை தேங்காய் கனவில் வந்தால் என்ன பலன்:
நீங்கள் புதியதாக தொழிலோ அள்ளாது வேறு ஏதோ செய்ய போகிறீர்கள் என்றால் அந்த செயலை நீங்கள் தாராளமாக தொடங்கலாம். நீங்கள் செய்யும் தொழிலிருந்து லாபம் கிடைக்கும் என்பதை உணர்த்துகிறது.