1. Home
  2. தமிழ்நாடு

மகளிர் உரிமை தொகை மனுக்களின் நிலை என்ன? ஆன்லைனிலேயே செக் செய்வது எப்படி?

1

ஜூலை 15, 2025 அன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாடு முழுவதும் நவம்பர் மாதம் வரை 10,000-க்கும் மேற்பட்ட சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

இந்த முகாம்கள் மூலம் கிராமப்புறங்களில் 15 துறைகளின் 46 சேவைகளையும், நகர்ப்புறங்களில் 13 துறைகளின் 43 சேவைகளையும் மக்கள் ஒரே இடத்தில் பெற்று வருகின்றனர். முக்கியமாக, சாதிச் சான்றிதழ், பட்டா மாற்றம், ஓய்வூதியம், முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் ஆதார் அட்டையில் திருத்தங்கள் போன்ற அத்தியாவசிய சேவைகளையும் பெற முடிகிறது.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்காக லட்சக்கணக்கான பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டுள்ளதா, நிராகரிக்கப்பட்டுள்ளதா அல்லது பரிசீலனையில் உள்ளதா என்பதை அறிய, தமிழக அரசு ஒரு பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

உங்கள் விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள, கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

  1. முதலில், https://ungaludanstalin.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் செல்லவும்.
  2. அடுத்து, “உங்களின் மனுவின் நிலையை அறிய” என்ற பகுதியை கிளிக் செய்யவும்.
  3. திரையில் தோன்றும் “Track Grievance” என்ற பட்டனை அழுத்தவும்.
  4. நீங்கள் ஏற்கனவே பயனர் கணக்கு உருவாக்கவில்லை என்றால், “New User? Signup” என்ற பட்டனை கிளிக் செய்து பதிவு செய்யவும்.
  5. உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், உங்கள் எண்ணுக்கு ஒருமுறை கடவுச்சொல் (OTP) வரும். அதை உள்ளிட்டு உங்கள் கணக்கை உருவாக்கிக் கொள்ளலாம்.
  6. அதன்பின், உங்கள் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தி மீண்டும் லாக் இன் (Log In) செய்யவும்.
  7. இப்போது, உங்கள் மனுவின் நிலையை (நிலுவையில் உள்ளவை, முடிவுற்றவை, காத்திருப்பில் உள்ளவை) ஆன்லைனில் நீங்கள் எளிதாகப் பார்க்க முடியும்.

எனவே, மகளிர் உரிமைத் தொகைக்காக விண்ணப்பித்த பெண்கள், இந்த இணையதளம் மூலம் தங்கள் விண்ணப்பத்தின் நிலையை எப்போது வேண்டுமானாலும் அறிந்துகொள்ளலாம்.

Trending News

Latest News

You May Like