1. Home
  2. தமிழ்நாடு

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் நிலவரம் என்ன ?

1

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் கடந்த முறை இந்தியன் யூனியன் முஸ்லீம் லிக் வெற்றிப் பெற்றதால், இந்த முறையும் திமுக கூட்டணியில் இராமநாதபுரம் தொகுதி அக்கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் அக்கட்சியின் வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் களமிறங்கி உள்ளார். அவருக்கு ஏணி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக சார்பில் ஜெயபெருமாள், பாஜக கூட்டணியின் ஆதரவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேச்சை சின்னத்திலும், நாம் தமிழர் கட்சி சார்பில் சந்திர பிரியா ஆகியோர் போட்டியிட்டுள்ளனர். ஓபிஎஸ்ஸுக்கு பலாப்பழம் சின்னமாக வழங்கப்பட்டுள்ள நிலையில், அவரது பெயரிலேயே மேலும் 5 பேர் சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நவாஸ் கனி முன்னிலை வகிக்கிறார். ஓபிஎஸ் பின்னடைவை சந்தித்து வருகிறார். அவருக்கு பிறகு ஜெயபெருமாள், சந்திரபிரபா ஜெயபால் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். இதன் காரணமாக ஓபிஎஸ்-ன் வெற்றி வாய்ப்பு கேள்விக்குரியதாகவே இருக்கிறது.

ஓ.பன்னீர்செல்வம் 37 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற நிலையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பன்னீர் செல்வங்கள் 500 வாக்குகளை கூட முழுமையாக பெற முடியவில்லை. ஒச்சப்பன் பன்னீர்செல்வம் 4164 வாக்குகளையும், மலையாண்டி பன்னீர்செல்வம் 298 வாக்குகளையும், ஒய்யாதேவர் பன்னீர்செல்வம் 163 வாக்குகளையும், ஒய்யாரம்  பன்னீர்செல்வம் 157 வாக்குகளையும், ஒச்சத்தேவர் பன்னீர்செல்வம் 79 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளனர். நோட்டாவிற்கு 848 வாக்குகள்  

Trending News

Latest News

You May Like