செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?

செவ்வாழை சாப்பிடுவதற்கான சரியான நேரம் என்ன?: செவ்வாழைப் பழம் சாப்பிடுவதற்கான சரியான நேரம் காலை 6 மணி.
இந்த நேரத்தில் முடியவில்லையென்றால் பகல் 11 மணி பிரேக் நேரத்திலோ, மாலை 4 மணி பிரேக் நேரத்திலோ சாப்பிடலாம். உணவு எடுத்தவுடன் செவ்வாழையைச் சாப்பிட்டால் மந்தமாக உணர்வதுடன், இதனுடைய முழு சத்துக்களும் நமக்குக் கிடைக்காமல் போய்விடும்.
இது எல்லா பழங்களுக்கும் பொருந்தும்.செவ்வாழையின் பயன்கள்: நரம்பு தளர்ச்சி ஏற்பட்டால் உடலில் பலம் குறையும். ஆண்மை குறைபாடு ஏற்படும்.
எனவே நரம்பு தளர்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள் தினசரி இரவு ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து 48 நாட்களுக்குச் செவ்வாழை சாப்பிட நரம்புகள் பலம் பெறும். ஆண் தன்மை சீரடையும்.
மாலைக்கண் நோய் கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்தவுடன் தினசரி செவ்வாழை பழத்தைச் சாப்பிட பார்வை தெளிவடையும்.
பல் வலி, பல்லசைவு போன்ற பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் தொடர்ந்து 21 நாட்களுக்குச் செவ்வாழை சாப்பிட்டு வர ஆடிய பல் கூடக் கெட்டிப்படும்.
முந்தைய தினம் சாப்பிட்ட சில உணவுகளால் மறுநாள் காலையில் மலம் வெளியேற முடியாமல் இருக்கும். காலையில் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிட அது குடலைத் தூண்டி கழிவை வெளியேற்ற வைக்கும்.