1. Home
  2. தமிழ்நாடு

எந்த சரக்குக்கு என்ன விலை? விலை உயர்வால் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

1

பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு, அரசின் கஜானாவை நிரப்பும். டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்வு என்பது பீர், பிராந்தி, விஸ்கி மற்றும் ரம் என பல்வேறு மதுபானங்களின் விலையை அதிகரிக்கிறது.  

180 மில்லி (குவார்ட்டர் என பிரபலமாக அறியப்படும்) பிராந்தி, விஸ்கி மற்றும் ரம் ஆகியவற்றின் 'சாதாரண' மற்றும் 'நடுத்தர' வகைகளின் விலை 10 ரூபாய் அதிகமாகும்,  'பிரீமியம்' குவாலிடி குவார்ட்டரின் விலை ரூ.20 விலை அதிகரிக்கிறது.

திருத்தப்பட்ட அட்டவணையின்படி, அதிக அளவில் விற்கப்படும் மதுபானங்கள், அதற்கேற்ப விலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் மொத்தம் சாதாரண வகைகளில் 43, நடுத்தர வகைகளில் 49, பிரீமியம் வகை பிராண்டுகளில் 128, பீர்களில் 128 வகைகள், ஒயின் வகைகளில் 13 ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.

இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. குவார்ட்டர் பாட்டில் ரூ.130, ஆஃப் பாட்டில் விலை ரூ.260 என்றும், ஃபுல் பாட்டில் ரூ.520 என்றும், மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.

இதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like