என்னது தட்கல் டிக்கெட் விலை 10 ஆயிரமா ? – அதிர்ச்சியில் பயணிகள்!!
ரயில்களில் டிக்கெட் கிடைக்காமல், தட்கலிலும் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாதவர்கள் எப்படியாவது சொந்த ஊருக்கு அல்லது, தங்கள் போக விரும்பும் இடத்திற்கு போக வேண்டும் என்று ஆம்னி பேருந்துகளையோ அல்லது விமானத்தையே நாடுகிறார்கள். அவர்களை குறிவைத்து ரயில்வே ஐஆர்சிடிசியில் பிரீமியம் தட்கல் புக்கிங் வைத்திருக்கிறது.
ஆகஸ்ட் 9 ஆம் தேதி அன்று பெங்களூரு – கொல்கத்தாவிற்கு செல்லும் ஹவ்ரா எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட விவரங்கள் வெளியாகி தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது சாதாரணமாக ஒரு ரயிலில், இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டியின் விலை 2900 ஆக இருக்கும். ஆனால் முன்பதிவில் இரண்டு அடுக்கு குளிர்சாதனப் பெட்டி (2AC) சுமார் 10,100 க்கு விற்கப்பட்டிருக்கிறது. இந்த டிக்கெட்டின் புகைப்படத்தை பயணம் செய்த ஒருவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். இதனால் பயணிகள் அனைவரும் பணம் அதிகரித்து விற்பதாக குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
இதுபற்றி ரெட்டிட் தளத்தில் ஒருவர் ஸ்கிரீன் ஷாட் ஷேர் செய்துள்ளார். அதுபற்றி அவர் கூறுகையில், பெங்களூருவில் இருந்து கொல்கத்தாவிற்கு ரயில் டிக்கெட் கட்டணம் 2ம்வகுப்பு ஏசி பெட்டிக்கு வழக்கமாக 2900 ஆக இருக்கும். இப்போது 10000 என்று காட்டுகிறது. நிச்சயம் இந்த கட்டணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்து நான் போக மாட்டேன் என்று அவர் கூறியுள்ளார். இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன்கள், குறைந்த கட்டணத்தில் விமானத்திலேயே பயணிக்க தாராளமாக டிக்கெட் கிடைக்கும் போது, ரயிலில் இந்த கட்டணத்தில் எதற்காக போக வேண்டும் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். சிலர் மருத்துவ காரணங்களால்விமானத்தில் பறக்க முடியாத நிலையில் உள்ளார்கள் என்றும், நடந்து கூட செல்ல முடியாதவர்களாக சிலர் இருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு இந்த கட்டணம் பெரும் சுமையாக இருக்கும் என்று நெட்டிசன் ஒருவர் கூறினார்.