பிரபலம் சொன்ன உண்மை : தனுஷ்-சிவகார்த்திகேயனுக்குள் என்ன சண்டை தெரியுமா..?

தனுஷ்-சிவகார்த்திகேயன் இருவருக்குள்ளும் ஏதோ சண்டை ஏற்பட்டு விட்டதாகவும், இதனால் இரு தரப்பினருக்கும் ஏதோ மனஸ்தாபம் இருப்பதாகவும் கூறப்பட்டது. இது குறித்து தற்போது ஒரு பிரபலம் பேசியிருப்பதும் வைரலாகி வருகிறது.
டிவி நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த போதே, சிவகார்த்திகேயனை அனைவருக்கும் பிடிக்கும். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நேர்காணல் செய்யும் சினிமா பிரபலங்களிடம் வாய்ப்பு கேட்டு எப்படியேனும் திரையுலகில் கால்பதித்து விட வேண்டுமென கனவு கண்டார். நினைத்தது போல, தனுஷின் 3 படத்தில் ‘குமரன்’ என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர், அதன்பிறகு அடுத்தடுத்து ஹீரோவாக நடித்து, இப்போது எங்கேயோ சென்று விட்டார்.
ஒரு காலத்தில், தனுஷிடம் வாய்ப்பு கேட்ட சிவகார்த்திகேயன், இன்று அவருக்கு சரிநிகரான நடிகராக மாறிவிட்டார். அதிலும் சமீபத்தில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் அவரது மார்கெட்டை இன்னும் தூக்கி விட்டது. இந்த நிலையில்தான், தனுஷுக்கும் சிவகார்த்திகேயனுக்குமிடையே பிரச்சனை வளர்ந்து வந்ததாக கூறப்பட்டது.
சிவகார்த்திகேயன், தன்னை வளர்த்து விட்டார்கள் என்ற காரணத்திற்காக அவர்களின் காலுக்கு கீழேயே தான் இருக்க வேண்டும் என சிலர் நினைத்ததாக அவ்வப்போது கூறுவார். இப்படி, அவர் தனது பட விழாக்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியவையெல்லாம், தனுஷை பற்றித்தானோ என பலர் சந்தேகிப்பதுண்டு. காரணம், சிவகார்த்திகேயன், சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலக்கட்டத்தில் அவர் கூடவே இருந்த தனுஷ், இப்போது இல்லை. இவர்களுக்குள் சண்டை இருக்கிறதா இல்லையா என்று தெரியாத போதிலும் கூட, ஒரு தரப்பினர் சிவகார்த்திகேயன் நன்றி மறந்து விட்டதாக கூற, இன்னும் சிலர் தனுஷுக்கு ஆணவம் ஜாஸ்தி என்று பேசத்தொடங்கினர்.
தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் திருமண வரவேற்பில் கூட தனுஷ், ஒரு பக்கம் தனியாக அமர்ந்திருக்க, சிவகார்த்திகேயன், அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் நயன்தாராவிடமும் அவரது கணவர் விக்னேஷ் சிவனிடமும்தான் பேசிய விதம் இருந்தனர். இது, எரிந்து கொண்டிருந்த பகைத்தீயில் இன்னும் காெஞ்சம் நெய் விட்டது பாேல இருந்தது.
ஓபனாக பேசிய பிரபலம்..
சிவகார்த்திகேயன்-தனுஷ் இடைய இருக்கும் உறவு குறித்து ஒரு பிரபல நடிகர் பேசியிருக்கிறார். 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தந்தையாக நடித்திருக்கும் ஜீவா ரவிதான் அந்த நடிகர். இவர், தமிழில் வெளியாகி இருக்கும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர், தனது சமீபத்திய நேர்காணலில், தனுஷ்-சிவகார்த்திகேயன் இடையே இருக்கும் உறவு குறித்து பேசினார்.
சிவகார்த்திகேயனின் திறமை மீது, தனுஷுக்கு எப்போதும் மரியாதை இருப்பதாக அவர் கூறினார். அதே மரியாதையை சிவகார்த்திகேயனும் தனுஷ் மீது வைத்திருக்கிறாராம். இவர்கள் இருவர் விஷயத்தில் பத்து பேர் பத்து விதமாக பேசுவதாக கூறிய ஜீவா, இருவருக்குள்ளும் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். ஒரு முறை, சிவகார்த்திகேயன் படம் ஒன்றில் தான் நடித்துக்கொண்டிருந்த போது, அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தனுஷ் வந்ததாகவும் அப்போது சிவாவின் நடிப்பை பார்த்து அவர் வெகுவாக பாராட்டியதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும், இவர்கள் இருவருக்குள்ளும் எந்த சண்டையும் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.