1. Home
  2. தமிழ்நாடு

நல்லச்சாராயத்திற்கும் கள்ளச்சாராயத்திற்கும் என்ன வித்தியாசம்?

1

பொதுவாக, டாஸ்மார்க் மற்றும் மதுபான பார்களில் விற்கப்படும் மதுக்களில் குறிப்பிட்ட அளவு மட்டும் எத்தனால் கலக்கப்படுகிறது. இதே, கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலக்கப்படுகிறது. இந்த எத்தனாலுக்கும், மெத்தனாலுக்கும் என்ன வித்தியாசம்?. 

எத்தனால் எனப்படும் எத்தில் ஆல்கஹால் தான் மது வகைகளில் இருக்கக் கூடியது. மெத்தனால் எனப்படும் மெத்தில் ஆல்கஹால் உயிருக்கே ஆபத்து விளைவிக்கக் கூடிய கொடிய விஷமாகும்.
அது தொழிற்சாலைகளில் சில வேதிப்பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. தொழிற்சாலைகளுக்கு வரும் மெத்தனாலில் 90 முதல் 100 சதவீதம் ஆல்கஹால் இருக்கும். அந்த மெத்தனாலை, நீர்த்துப் போகச் செய்யாமல் அப்படியே குடித்தால் ஓரிரு நிமிடங்களில் மரணம் சம்பவிக்கும்

 மெத்தனால் மனித உடலுக்குள் நுழைந்ததும் உணவு மண்டலம், நரம்பு மண்டலத்தை சீர்குலைத்துவிடும். வயிற்றுக்குள் விஷ சாராயம் சென்றவுடன் மகிழ்ச்சியாக இருப்பது போல் தோன்றும். ஆனால் அடுத்த சில விநாடிகளில் வயிறும், குடலும் வெந்துவிடும். மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்தவர்கள் நுரைநுரையாக வாந்தி எடுப்பார்கள். அந்த வாந்தி எல்லாம் நுரையீரலுக்குச் சென்றுவிடும் என்பதால் சட்டென்று மூச்சு அடைத்துவிடும்.

இதனால் முதலில் பாதிக்கப்படுவது கண். அதாவது, கண் உருத்தலை தொடர்ந்து கண் பார்வை மங்கலாக மாறி வாந்தி , மயக்கம் என கண் பார்வை முற்றிலுமாக செயலிழந்து உயிர் பிரிகிறது.முதலுதவி மற்றும் மருத்துவமனைக்கு சென்ற பின் செய்யும் அவசர சிகிச்சை. நரம்பு மூலமாக எத்தனால் கொடுக்கப்படுகிறது. 

அதேநேரத்தில் நரம்பு மண்டலம் வழியாக மெத்தனாலின் விஷத்தன்மை மூளைக்கும் பரவுவதால், மூளை செல்கள் உடனே அழிந்துவிடும். மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஓரிரு நிமிடங்களில் அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள். அதிக போதை வேண்டும் என்ற எண்ணத்தில் அறியாமையால்தான் இதனை சிலர் சாப்பிடுகின்றனர். அதிக நேரம் போதையில் மிதக்கச் செய்வதன் மூலம் இது தங்களை நேராக சொர்க்கத்திற்கே கூட்டிச் செல்லும் என்று அவர்கள் நம்புகின்றனர். ஆனால், நடப்பதோ வேறு.

காலம் தாழ்த்தினால் கண் பார்வை முற்றிலுமாக செயலிழந்து உயிர் போகும் என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்

Trending News

Latest News

You May Like