1. Home
  2. தமிழ்நாடு

கண்கள் துடித்தால் என்ன பலன் : பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா? கெட்டதா?

1

கண் துடிப்பது என்பது அனைவருக்கும் நடப்பது தான் என்றாலும் இது அனைத்து சமயங்களிலும் துடிப்பது கிடையாது. சில குறிப்பிட்ட சமயங்களில் மட்டுமே துடிக்கும். கண் துடிப்பதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் அதற்கு ஜோதிட ரீதியாக என்ன பலன் சொல்லப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதிலேயே அதிகமானவர்கள் ஆர்வம் காட்டுவது உண்டு. ஜோதிட சாஸ்திரப்படி கண் துடிப்பதற்கு ஆண்களுக்கு வேறு விதமாகவும், பெண்களுக்கு வேறு விதமாகவும் பலன்கள் சொல்லப்படுகிறது. இதற்கு ராமாயணத்திலேயே எடுத்துக்காட்டுகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. பெண்களுக்கு இடது கண் துடித்தால் நல்லதா? கெட்டதா? 

ராமாயணத்தில் சீதா தேவி, அசோக வனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த போது கிஷ்கிந்தையில் சுக்ரீவனும், ராமனும் நண்பர்களாக ஆனார்கள். அக்னியை சாட்சியாக வைத்து, எந்த சூழ்நிலையில் ராம பிரானை விட்டு விலகாமல், அவருக்கு துணையாக நின்று, உதவி செய்வதாக வாக்களித்தார். அந்த சமயத்தில் இலங்கையில் அசோக வனத்தில் இருந்த சீதைக்கு இடது கண் துடித்தது. அப்போது, தான் ராமனுடன் விரைவில் சேர போகிறோம் என்ற நம்பிக்கை ஏற்பட்டு, சீதா தேவி மகிழ்ச்சி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதே வேளையில் அரண்மனையில் இருந்த ராவணனுக்கும் இடது கண் துடித்தது. அதன் விளைவாகவே போரில் ராவணன் மடிந்து போகும் நிலை ஏற்பட்டது.

பெண்களுக்கு இடது கண் துடித்தால் அது மிகவும் நல்ல சகுனமாக சொல்லப்படுகிறது. பலவிதமான நன்மைகள் ஏற்படுவதற்கான அறிகுறியாக இது சொல்லப்படுகிறது. பெண்ணுக்கு இடது கண் துடித்தால் விரைவில் வீட்டில் மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்க போகிறது என்று அர்த்தம். புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஏதாவது புதிய முயற்சிகள் மேற்கொண்டிருந்தால் அது வெற்றி அடையும். புதிய வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.

இடது கண் துடிப்பதால் பெண்களுக்க மகிழ்ச்சி, அதிர்ஷ்டம் தேடி வரப் போகிறது என்று அர்த்தம். பல நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த முக்கிய பொறுப்புகள், பதவி உயர்வு, பண வரவு போன்றவை தேடி வரலாம். விரைவில் பெரிய அளவில் பணம் சம்பாதிக்க போகிறார் என்று அர்த்தம். விரைவில் பண லாபம் கிடைக்கும் என்று அர்த்தம். வீட்டில் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்று அர்த்தம்.

அதே சமயம் ஒரு நபருக்கு கண்கள் துடிப்பதற்கு பலவிதமான காரணங்கள் இருப்பதாக அறிவியல் ரீதியாக சொல்லப்படுகிறது. கண்களில் ஏற்படும் நரம்பு பாதிப்பு, அழுத்தம் காரணமாக கண் துடிப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் கம்யூட்டர், மொபைல் போன், டிவி போன்றவற்றை அதிக நேரம் பார்த்து, பயன்படுத்திக் கொண்டிருப்பதாலும், கண்களுக்கு சரியான ஓய்வு இல்லாமலும், போதி அளவிற்கு தூக்கம் இல்லாமலும் இருந்தால் இது போன்ற பாதிப்புகள் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

Trending News

Latest News

You May Like