தங்க மோதிரம் அல்லது காதணியை உங்க கனவில் கண்டால் என்ன பலன் தெரியுமா ?

ஒரு சில நேரங்களில் நீங்கள் கனவு கண்டு இருக்கும் பொழுது தூக்கத்திலிருந்து எழும்பி விடுவீர்கள். இப்படி நீங்கள் காணக்கூடிய எல்லா கனவுகளும் பல்வேறு அர்த்தங்களை கொண்டிருக்கிறது.
பல கனவுகள் உங்கள் வாழ்க்கையோடு ஒன்றிப்போகும் விதமாக அமைகிறது. அப்படி நீங்கள் காணக்கூடிய கனவுகளில் மிகவும் முக்கியமான கனவு தங்கத்தை உங்கள் கனவில் காண்பது. பெரும்பாலான நேரங்களில் தங்கம் அல்லது தங்க நிறம், தங்க அணிகலன்கள் செல்வத்தையும் செழிப்பையும் குறிக்கிறது.
ஒரு சில நேரங்களில் இது உங்களுடைய அளவு கடந்த ஆன்மீக விருப்பங்களையும் குறிக்கிறது. பொதுவாக நீங்கள் தங்கத்தை உங்களுடைய கனவில் கண்டால் உங்களுடைய வருமான வாய்ப்புகள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பதே அர்த்தம்.
அதுமட்டுமில்லாமல் உங்களுடைய கனவில் தங்கத்தை பார்ப்பது உங்களுடைய திறமைகள் மிக வேகமாக வெளி உலகத்தில் ஜொலிக்கப் போகிறது என்பதையும் குறிக்கிறது. மேலும் சமூகத்தில் மிகப்பெரும் அந்தஸ்து கொண்டவர்களாக மாறப் போகிறீர்கள் என்பதையும் குறிக்கிறது.
உங்களுடைய கனவில் ஒரு தங்க மோதிரத்தை கண்டால் அது நீண்ட காலமாக உங்களுக்கு வரவிருக்கக் கூடிய ஒரு அதிர்ஷ்டமான செயலை குறிக்கிறது. நீண்ட காலமாக கடினமாக உழைத்தும் கிடைக்காத அந்த வெற்றி வாய்ப்பு இனி உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது.
தங்க நகைகளை உங்களுடைய கனவில் காண்பது உங்களுக்கு மிகவும் பிடித்தவரை பற்றி சொல்கிறது. மிகவும் ஆழமாக நேசிக்கும் ஒருவருடைய அன்பை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
உங்களுடைய கனவில் தங்கச் சங்கிலியை கண்டால் அது நெருங்கிய உறவினர், பழைய நண்பர்களுடன் உறவு மீண்டும் வலுப்படும் என்பதை குறிக்கிறது.
உங்களுடைய கனவில் தங்க கட்டியைக் கண்டால் அது உங்கள் காதல் வாழ்க்கையை பற்றி சொல்கிறது. காதல் வாழ்க்கை நல்ல ஆழமாக உங்கள் இருவருக்குள்ளும் பிணைந்து போகும் என்பதை இது குறிக்கிறது.
தங்க நாணயங்களை கனவில் காண்பது பொதுவாக வெற்றியின் அடையாளமாக இருக்கிறது. உங்களுக்கு வர வேண்டிய வருமானம், வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு அந்த வியாபாரம் இன்னும் அதிகமாக விருத்தியாகும். தங்க நாணயங்களை நீங்கள் கனவில் கண்டால் எதிர்கால வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
உங்க கனவில் ஒரு தங்க நெக்லஸை கண்டால் அது வாழ்க்கையில் இதுவரைக்கும் நிறைவேறாத ஆசைகளை பற்றி சொல்கிறது. நீண்ட நெடுங்காலமாக உங்களுக்கு நிறைவேறாமல் இருந்த ஆசைகள் விரைவில் நிறைவேறும் என்பதை இது குறிக்கிறது.
உங்களுடைய கனவில் தங்க காதணிகளை கண்டால், சமூக வாழ்க்கையில் புதிய நட்புகள் கிடைக்கும் என்பதை குறிக்கிறது.
தங்கப் பற்களைக் கனவில் கண்டால் செல்வ செழிப்பு அதிகரிக்கிறது என்பதை குறிக்கிறது. இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். அதனால் நல்ல விஷயங்களில் அதிக கவனத்தை செலுத்தும் பொழுது மிகப்பெரிய அளவில் செல்வத்தை நீங்கள் வாரிக் குவிக்கலாம்.
தங்கத்தை புதைப்பது போல கனவு கண்டால் இந்த கனவு கூட இருப்பவர்கள் உங்களைப் பற்றி ரகசியங்களை பிறரிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை குறிக்கிறது. இதனால் பல பிரச்சினைகளுக்கு உள்ளாவீர்கள்.
தங்கத்தால் சூழப்பட்டு இருப்பது போல கண்டால் உங்களுக்கு இருக்கக்கூடிய எல்லா பண பிரச்சனைகளும் நீங்கி விரைவில் அதிக அளவு பணம் சம்பாதிக்க போகிறீர்கள் என்பதை குறிக்கிறது.
கனவில் தங்கத்தை தேடுவது போல கண்டால் விரைவில் புதிய ஒரு நட்பு உங்களுக்கு கிடைக்கப் போகிறது என்பதை குறிக்கிறது. இதன் மூலமாக மிகப்பெரிய அளவில் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள்.