தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு கொடுத்த கிப்ட் பாக்ஸில் என்ன இருக்கிறது தெரியுமா..?
முதலமைச்சர் ஸ்டாலின், தான் சந்திக்கும் அனைத்து விருந்தினருக்கும் ஒரு பரிசுப் பெட்டகத்தை தமிழகத்தில் வழங்கி பார்த்திருப்போம்.
இந்நிலையில் அமெரிக்க முதலீட்டார்களிடம் அவர் கொடுத்து பரிசுப்பெட்டகத்தில் என்னதான் உள்ளது என அனைவரின் ஆர்வத்தையும் தூண்ட வைத்துவிட்டது எனலாம்.
அமெரிக்க முதலீட்டாளர்கள் முதல் தமிழக விருந்தினர்கள் வரை முதலமைச்சர் பரிசளிப்பது “தடம்”. இந்த தடம் என்பது தமிழ்நாட்டின் கைவினைக் கலைஞர்களால் உருவான கைவினைப் பொருள்களை ‘ஸ்டார்ட்அப் தமிழ்நாடு’ என்ற திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. இந்த பொருட்களை நவீன சமுதாயத்தில் அறிமுகம் செய்வதற்கான புதிய முயற்சியின் கீழ் இந்த செயல்பாடு நடந்து வருகிறது.
பெட்டகத்தினுள் இருக்கும் பொருள்கள் :
- திருநெல்வேலியில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை
- விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை)
- நீலகிரியிலிருந்து தோடா எம்பிராய்டரி சால்
- பவானியிலிருந்து பவானி ஜமுக்காளம்
- புலிகாட்டிலிருந்து பனை ஓலை ஸ்டாண்ட்
- கும்பகோணத்திலிருந்து பித்தளை விளக்கு