எது ஆரோக்கியமானது..? கடலை மிட்டாய் VS வேர்க்கடலை VS கிரீம் பிஸ்கட்..!

கடலை மிட்டாயில் 520 கலோரிகள், கிரீம் பிஸ்கட்டில் 480 கலோரிகள், வேர்க்கடலையில் 550 கலோரிகள் இருக்கிறது.இதேபோல், கடலை மிட்டாயில் 45 முதல் 50 கிராம் மாவுச்சத்தும், 40 முதல் 42 கிராம் வரை சர்க்கரையும் இருக்கிறது .கிரீம் பிஸ்கட்டில் 70 கிராம் மாவுச்சத்தும், 38 முதல் 40 கிராம் சர்க்கரையும் இருக்கிறது. வேர்க்கடலையில் 15 கிராம் தான் மாவுச்சத்து இருக்கிறது. இதில் இருந்து கடலை மிட்டாய் மற்றும் கிரீம் பிஸ்கட்டில் ஏறத்தாழ ஒரே அளவிலான சர்க்கரை இருப்பதை உணர முடிகிறது.
இது தவிர வேர்க்கடலையில் 50 கிராம் அளவிற்கு கொழுப்பு இருக்கிறது. கடலை மிட்டாயில் 20 கிராமும், கிரீம் பிஸ்கட்டில் 15 கிராமும் கொழுப்பும் காணப்படுகிறது. மேலும், வேர்க்கடலையில் 25 கிராம் புரதமும், கடலை மிட்டாயில் 15 கிராம் புரதமும், கிரீம் பிஸ்கட்டில் 5 கிராம் புரதமும் இருக்கிறது.
எனவே, கடலை மிட்டாயை மிக ஆரோக்கியமான உணவு என்று கருத வேண்டாம்.வேர்க்கடலையை சாப்பிடலாம் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
.