சீமான் கட்சியில் என்ன தான் நடக்கிறது..?மேலும் ஒரு முக்கிய நிர்வாகி விலகல்..!
சமீப காலமாக கட்சி, சீமான் நடவடிக்கை மீது சரமாரியாக குற்றச்சாட்டை முன்வைத்து, நாதகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வருவது தொடர் கதையாகி வருகிறது.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் மருத்துவ பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இளவஞ்சி கட்சியில் இருந்து விலகியுள்ளார். கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருந்த அவர் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகியுள்ளார்.