டெல்லிக்கு செல்வதால் என்ன நடந்து விடப்போகிறது; நான் ஒரே மாதிரி தான் இருப்பேன் : அண்ணாமலை..!

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, “மத்திய அரசு நிதியை மாநில அரசு முறையாகப் பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பாரதம் திட்டத்தை தமிழக அரசு தனது திட்டமாக எடுத்துக் கொள்ள வேண்டும்; பா.ஜ.க. திட்டமாகப் பார்க்கக் கூடாது.
சமூக வலைத்தளங்களில் பொய்யைப் பரப்புவது தி.மு.க. தான். பா.ஜ.க. மீது தி.மு.க.வுக்கு பயம் வந்துவிட்டது. மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது; அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது. தேசத்தில் ஊழலற்ற ஒரே கட்சி பா.ஜ.க. என்பதால் தான் பலருக்கும் வெறுப்பு.
கட்சியை வலுப்படுத்துவதே எனது நோக்கம்; கூட்டணிப் பற்றி கட்சித் தலைமை முடிவெடுக்கும். டெல்லிக்கு செல்வதால் என்ன நடந்து விடப்போகிறது; நான் ஒரே மாதிரி தான் இருப்பேன். என் மீது இரண்டரை ஆண்டுகளாக எல்லோரும் சேர்ந்து கல் வீசுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.