1. Home
  2. தமிழ்நாடு

இந்த லைசென்ஸ் இல்லாட்டினா என்ன... சர்வதேச லைசென்ஸ் இருக்கு பாஸ்.. பட்டும் திருந்தாத டிடிஎஃப் வாசன்..!

1

சென்னை - பெங்களூரு நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டி விழுந்து வாரியவர் டிடிஎப் வாசன். தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபட்டு வந்ததால் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். டிடிஎப் வாசனால் பல இளம் தலைமுறையினர் கெட்டுப் போகிறார்கள் என்பதால் அவரது யூடிடியூப் சேனலை முடக்கிவிடுமாறும், அவரது பைக்கை எரித்து விடுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தவிர, அவரது லைசென்ஸும் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், நேற்று முன்தினம் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதையடுத்து, நேற்று அவர் புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்குள்ள செய்தியாளர்களிடம் டிடிஎப் வாசன் பேசினார்.

அப்போது பேசிய  டிடிஎப் வாசன், "சிறை அனுபவம் கஷ்டமாக தான் இருந்தது. ஒரு கை வேற உடைஞ்சு போச்சுண்ணா. அதனால, இன்னும் கஷ்டமா இருந்துச்சு. ஆனால், நிறைய சிறைவாசிகள் எனக்கு தெரிஞ்சவங்களா இருந்தாங்க. அவங்க எனக்கு நிறைய உதவி பண்ணாங்க. அதனால் சமாளிச்சுட்டேன். அதிகாரிகள் எல்லாம் அன்பாக நடந்துக்குட்டாங்க" என்றார்.

இதையடுத்து, "உங்க லைசென்ஸை 10 வருஷத்துக்கு கேன்சல் பண்ணிருக்காங்க. அதை பற்றி என்ன நினைக்குறீங்க?" என நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த டிடிஎப் வாசன், "பைக் தான் என் வாழ்க்கையே. அதுக்காக என் வாழ்க்கையையே அர்ப்பணிச்சிருக்கேன். அப்படி இருக்கும் போது 10 வருஷத்துக்கு லைசென்ஸை கேன்சல் பண்ணது நியாயமே இல்லைங்கண்ணா. 

திருத்தணும் மாதிரி இல்ல. என் வாழ்க்கையை அழிக்கணும்னு நினைச்சு பண்ண மாதிரி இருக்கு. ஆனால் நான் பைக்கும் ஓட்டுவேன். படமும் நடிப்பேன். பேஷனை (Passion) எல்லாம் விட்டே தர முடியாது. இந்த லைசென்ஸ் இல்லாட்டினா என்ட்ட இன்டர்நேஷனல் லைசென்ஸ் இருக்கு. அதனால் பைக்கை கட்டாயம் ஓட்டுவேன்" என டிடிஎப் வாசன் பதிலளித்தார்.

Trending News

Latest News

You May Like