1. Home
  2. தமிழ்நாடு

இனி இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்தால்.... அமித்ஷா எச்சரிக்கை

1

ஜம்மு-காஷ்மீரின் எல்லை மாவட்டமான பூஞ்சுக்கு அமித் ஷா இரண்டு நாள் பயணமாக சென்றார். அங்கு அவர் பேசுகையில், ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு வலுவான பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தலைமையகங்களை இந்தியப் படைகள் குறிவைத்து அழித்தது இதுவே முதல் முறை என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீரில் பொதுமக்கள் பகுதிகள் மற்றும் மதத் தலங்களை பாகிஸ்தான் குறிவைத்தது. வடக்கு காஷ்மீரின் உரி முதல் ஜம்மு பிராந்தியத்தில் பூஞ்ச் மற்றும் ரஜோரி வரையிலான ஜம்மு-காஷ்மீரின் எல்லைப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் காட்டிய துணிச்சலை அமித் ஷா பாராட்டினார். பஹல்காம் தாக்குதல் அப்பாவி மக்கள் மீதான கோழைத்தனமான தாக்குதல் என்று கூறினார்.


பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கையின்படி, ஒவ்வொரு பயங்கரவாத தாக்குதலுக்கும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும். அதன்படி, மே 7-ஆம் தேதி ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அழித்தோம்.
முதல் முறையாக இந்தியப் படைகள் பாகிஸ்தானுக்குள் இருந்த பயங்கரவாதத் தலைமையகங்களை வெற்றிகரமாக குறிவைத்து அழித்தது. பயங்கரவாத தலைமையகம் மீதான இந்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் எந்த ராணுவ நிலைகளையும் குறிவைக்கவில்லை என்றும், ஒரு பொதுமக்களுக்கு கூட காயம் ஏற்படவில்லை என்றும் கூறினார்.

பொதுமக்கள், ராணுவம் அல்லது எல்லைப் பகுதியில் நடைபெறும் எந்தவொரு தாக்குதலையும் இந்தியா பொறுத்துக்கொள்ளாது என்று தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like