எது நடக்க கூடாதுனு நெனைச்சேனோ அது இப்ப நடக்க போகுது- மிரட்டலாக வெளியான டிமான்டி காலனி 2 ட்ரைலர்..!
சினிமா ரசிகர்கள் குறிப்பாக, ஹாரர் பட (Tamil Horror Movie) ரசிகர்களிடையே 'டிமான்டி காலனி' திரைப்படம் அதன் புதுமையான கதை சொல்லலுக்கும் உறைய வைக்கும் காட்சிகளுக்காகவும் புது பிராண்டாக உருவானது.
நடிகர் அருள்நிதி மற்றும் இயக்குநர் அஜய் ஞானமுத்து கூட்டணி தற்போது 'டிமான்டி காலனி 2' (Demonte Colony 2) என்ற படத்துக்காக மீண்டும் இணைந்திருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிக அளவில் எகிறி இருக்கிறது.
அருள்நிதி நாயகனாக நடிக்கும் இப்படத்தில் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சாம்.சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது.
இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலர் சற்று முன் வெளியானது