ஜூலை 31க்குள் வருமான வரியை தாக்கல் செய்யத் தவறினால் என்ன நடக்கும்?
வருமான வரிக் கணக்கை கடைசி தேதிக்குள்(நாளை ஜூலை 31க்குள்) தாக்கல் செய்யத் தவறினால், இந்தியாவில் வரி செலுத்துவோர் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். இது அவர்களின் நிதி திட்டத்தை பாதிப்பதோடு அவர்கள் சட்ட ரீதியான சில விளைவுகளையும் சந்திக்க நேரிடலாம்.
- காலக்கெடுவிற்குள் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யாமல், அதற்கு பிறகு தாக்கல் செய்தால், வருமான வரிச் சட்டத்தின் 234A பிரிவின்படி அபராதம் விதிக்கப்படக்கூடும்.
- இதில் வட்டிக் கட்டணங்களும் வசூலிக்கப்படலாம்.
- பிரிவு 234F -ன் படி தாமதக் கட்டணமும் விதிக்கப்படுகின்றது.
- இது வரி செலுத்துபவரின் மொத்த வருமானத்தின் அடிப்படையில் ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை மாறுபடும்.
ஐடிஆர் தாமதமாக தாக்கல் செய்வதால் உண்டாகும் பிற பிரச்சனைகள்:
- ITR ஐ தாமதமாக தாக்கல் செய்வது அந்த ஆண்டின் இழப்புகளை அடுத்த நிதி ஆண்டிற்கு எடுத்துச் செல்லும் திறனைக் கட்டுப்படுத்துகிறது.
- கடைசி தேதிக்குப் பிறகு வருமான வரி கணக்கு தாக்கல் செய்யப்பட்டால், சில வகையான இழப்புகளை அடுத்த ஆண்டிற்கு கொண்டுசெல்ல முடியாது.
வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யும் முன் பின்வரும் விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.
1. திருத்தப்பட்ட வரி அடுக்குகள் மற்றும் விகிதங்கள்: இந்த ஆண்டு, அரசாங்கம் புதிய வரி விதிப்பு முறையின் கீழ் புதிய வரி அடுக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது விலக்குகள் இல்லாமல் குறைந்த வரி விகிதங்களை வழங்குகிறது. பல்வேறு விலக்குகளை உள்ளடக்கிய பழைய முறை விட இது எளிதாகும். பழையது புதியது எது வேண்டுமோ நீங்கள் தேர்வு செய்யலாம். உங்கள் நிதி நிலைமைக்கு எது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை தீர்மானிக்க, இரண்டு முறைகளையும் ஒப்பிடுவது முக்கியம்.
2. முதல் முறை - பழைய வரி விதிப்பு முறை. இதில் நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். 5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 20 சதவிகிதம் வரி இருக்கும்.
10 லட்சத்திற்கு மேல் வாங்கினால் 30 சதவிகிதம் வரி இருக்கும். இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் கொஞ்சம் விலக்கு பெற முடியும். 7 லட்சம் வரை வருமானம் வாங்குபவர்கள் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் இன்னும் அதிக விலக்குகளை பெற முடியும். இந்த வரி விதிப்பில் கடந்த முறை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
3. புதிய முறை; பழைய முறை வேண்டாதவர்கள் புதிய முறையை பின்பற்ற முடியும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதில் இன்று மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களுக்கு முன்பு வரை, நீங்கள் வாங்கும் வருட வருமானம் 2.5 லட்சத்திற்கு வரி இல்லை. ஆனால் 2.5 லட்சத்தில் இருந்து 5 லட்சம் வரை வருமானம் வாங்கினால் 5 சதவிகிதம் வரி இருக்கும். அதுவே 5 லட்சத்தில் இருந்து 7.5 லட்சம் வரை வாங்கினால் 10 சதவிகிதம் வரி இருக்கும். 7.5 லட்சத்தில் இருந்து 10 லட்சம் வரை வாங்கினால் 15 சதவிகிதம் வரி இருக்கும். 10 லட்சம் முதல் 12.5 லட்சம் வரை 20% வரி 20 சதவிகிதம் வரி விதிக்கப்படும். நடைமுறையில் இருந்த இந்த புதிய வரி விதிப்பு முறையில் கடந்த பட்ஜெட்டில் மாற்றம் செய்யப்பட்டது.
4.ரிபேட்; புதிய வருமான வரி பிரிவில் உள்ளவர்களுக்கு தனிநபர் வருமான வரி - டாக்ஸ் ரிபேட் (Tax rebate) ரூ.7 லட்சம் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது தற்போது மாற்றப்பட்ட புதிய வரி விதிப்பு முறையில் 7 லட்சம் ரூபாய் வருமானம் இருந்தால் வரி கட்ட வேண்டியது இல்லை. 7க்கு கீழ் எவ்வளவு வாங்கினாலும் வரி கிடையாது. அதுவே நீங்கள் 7.10 லட்சம் வாங்குகிறீர்கள் என்றால் உங்களின் 0 - 300000 வருமானத்திற்கு : 0 சதவீத வரி விதிக்கப்படும் . 300000-600000 வருவாய்க்கு : 5 சதவீத வரி விதிக்கப்படும் . 600000 -900000 விதிக்கப்படும் : 10 சதவீத வரி விதிக்கப்படும் 900000 - 1200000 வருவாய்க்கு : 15 சதவீத வரி விதிக்கப்படும் 1200000 -1500000 வருவாய்க்கு : 20சதவீத வரி விதிக்கப்படும் 15 மேல் வருவாய்க்கு : 30 சதவீத வரி விதிக்கப்படும் . புரிகிறபடி சொன்னால்.. 7 லட்சத்திற்கு வரி இருக்காது.
5. விலக்கு இல்லை: நீங்கள் 8 லட்சம் வருமானம் வாங்குகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.. இப்போது அந்த 8 லட்சத்தில் முதல் 3 லட்சத்திற்கு வரி இல்லை. 3-6 லட்சத்திற்கு 5 சதவிகிதம் வரி உள்ளது. 6 -9 லட்சத்திற்கு 10 சதவிகிதம் வரி உள்ளது. இதனால் 35,000 ரூபாய் வரை வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய முறையில் இதில் 80C, 80D போன்ற சலுகைகள் மூலம் வரியில் விலக்கு பெற முடியாது. இதனால் இதை அப்படியே கட்ட வேண்டி இருக்கும்.
6. பிரிவு 80C மற்றும் 80D வரம்புகளில் மாற்றங்கள்: பிபிஎஃப், என்எஸ்சி மற்றும் ஆயுள் காப்பீட்டு பிரீமியங்களில் முதலீடுகளை உள்ளடக்கிய பிரிவு 80சியின் கீழ் வரம்புகள் ரூ.1.5 லட்சமாக இருக்கும். வரி செலுத்துவோர் இப்போது தங்களுக்கும், தங்கள் குடும்பங்களுக்கும் மற்றும் மூத்த குடிமக்களுக்கும் உடல்நலக் காப்பீட்டிற்காக செலுத்தப்பட்ட பிரீமியங்களுக்கு அதிக விலக்குகளைப் பெறலாம்.
7.ஓய்வூதியதாரர்களுக்கான நிலையான விலக்கு: ஓய்வூதியம் பெறுவோருக்கு ரூ.50,000 புதிய தரக் கழிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது ஓய்வூதிய வருமானத்திற்கும் பொருந்தும். இது ஊதியம் பெறும் நபர்களுக்கு கிடைக்கும் நிவாரணம் போன்றது. ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் வரிக்குட்பட்ட வருவாயைக் குறைப்பதற்காக இந்த விலக்கு கோரப்படுவதை உறுதிசெய்ய வேண்டும்
.png)