1. Home
  2. தமிழ்நாடு

உங்கள் சேமிப்புக் கணக்கில் ரூ.10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால் என்ன ஆகும் தெரியுமா ?

1

நம்மில் நிறையப் பேருக்கு இந்த விதிமுறை பற்றி முழுமையாகத் தெரியவில்லை. வருமான வரி விதிகளின்படி, ஒரு நிதியாண்டில் உங்கள் சேமிப்புக் கணக்கில் மொத்த வைப்புத் தொகை ரூ.10 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதைத் தாண்டி டெபாசிட் செய்திருந்தால் வருமான வரித்துறை உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்.

வருமான வரிச் சட்டத்தின் 269ST பிரிவின் கீழ் ஒரு நாளில் ரூ.2 லட்சம் வரை பரிவர்த்தனை செய்யலாம். இதற்கு மேல் ஒரு தொகையை பரிவர்த்தனை செய்தால் அதற்கான காரணத்தை வங்கியிடம் தெரிவிக்க வேண்டும். விதிகளின்படி, ஒருவர் ஒரு நாளில் ரூ. 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட தொகையை டெபாசிட் செய்தால், அவர் அதை வங்கிக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் பான் கார்டு விவரங்களையும் வழங்க வேண்டும். அந்த நபரிடம் பான் எண் இல்லை எனில், அவர் படிவம் 60 அல்லது 61ஐ பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

அதேபோல, வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 10 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், அது அதிக மதிப்பாகக் கருதப்படுகிறது. அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட வங்கி நம்முடைய பரிவர்த்தனை தொடர்பான் தகவலை வருமான வரித்துறைக்கு அனுப்பும். ஒருவேளை நீங்கள் பெரிய தொகையை பரிவர்த்தனை செய்து அதன் தகவலை வருமான வரித் துறைக்கு தெரிவிக்காமல் இருந்தால் உங்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும்.

இந்த நிலையில், அந்த நோட்டீசுக்கு நீங்கள் பதில் அளித்தே ஆகவேண்டும். மேலும், நோட்டீசுக்கான பதிலுடன், தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களையும் அளிக்க வேண்டும். இதில் உங்கள் கணக்கு அறிக்கை, முதலீட்டு பதிவுகள் அல்லது சொத்து தொடர்பான ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். எனவே வங்கிக் கணக்கில் அதிகளவு பணத்தை டெபாசிட் செய்வதற்கு முன் அது தொடர்பான விதிமுறைகள் பற்றித் தெரிந்துகொண்டு அதன்படி நடப்பது நல்லது.

Trending News

Latest News

You May Like