முதல்வரே வாக்கு கொடுத்தீர்களே என்னாச்சு.. ஓபிஎஸ் கேள்வி..?
கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க கோரி தேனியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், “கோடநாடு கொலை, கொள்ளை செய்த குற்றவாளிகளையும், அதன் பின்னால் இருப்பவர்களையும் வெளிக்கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராட்டமாக வெடிக்கும். மக்கள் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ள இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். பதவியேற்ற 100 நாட்களில் கோடநாடு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தருவதாக ஸ்டாலின் கூறியிருந்தார். கொடுத்த வாக்கு என்னாச்சு? கோடநாடு குற்றவாளிகள் யார் என விரைவில் அடையாளம் காட்டப்படும்.