1. Home
  2. தமிழ்நாடு

பிரபல நடிகைக்கு என்ன ஆச்சு...? காலில் கட்டுடன் இருக்கும் போட்டோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

Q

பிரபல நடிகராக வலம் வருபவர் வருண் தேஜ், இவருக்கு தமிழில் 'பிரம்மன்' படத்தில் நடித்த லாவண்யா திரிபாதியும், ‘Antariksham 9000 KMPH’ என்ற படத்தில் நடித்த போதிலிருந்து காதலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதுகுறித்து இருவருமே பொதுவெளியில் பேசாமல் இருந்தனர். அதன் பிறகு திடீரென இருவரும் திருமண அறிவிப்பு கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

இந்நிலையில் நடிகை லாவன்யா திரிப்பாதி, காலில் கட்டுடன் இருப்பது போன்ற ஃபோட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். அதில், "குணமடைந்து வருகிறேன்" என்று மட்டும் குறிப்பிட்டிருக்கும் அவர், முறிவுக்கான காரணம் ஏதும் கூறவில்லை. படப்பிடிப்பில் அவரது கால் பிசகியதாகவும், தற்போது ஓய்வில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

 Q

 

Trending News

Latest News

You May Like