1. Home
  2. தமிழ்நாடு

சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆச்சு? 6ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்..!

1

திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி ‘என்றாவது ஒருநாள்’ என்ற திரைப்படம் இயக்கி சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றார். தனது அடுத்த திரைப்படத்திற்காக லொகேஷன் பார்ப்பதற்காக இமாச்சல பிரதேசம் சென்றார். அவரிடம் உதவியாளராக பணியாற்றும் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் என்பவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் லொகேஷன் பார்ப்பதற்காக வாடகை காரில் சென்றுள்ளனர். சட்லஜ் நதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் கார் நிலைதடுமாறி சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது. திங்கள் கிழமை ஓட்டுநர் டென்சினின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. படுகாயங்களுடன் கோபிநாத் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என்பது தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்,

தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கடற்படையினர் என பல்வேறு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சட்லஜ் நதிக்கரையோரம் வசிக்கும் மக்களின் உதவியையும் வெற்றி துரைசாமியின் குடும்பத்தினர் நாடியுள்ளனர்.

பாறை இடுக்குகளில் மனித மூளை ஒன்று கண்டெடுக்கப்பட்டு டின்ஏ சோதனைக்கு அனுப்பட்டது. அதன் முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இந்த சூழலில் வெற்றி துரைசாமியின் ஐபோன், சூட்கேஸ், மற்றும் அவரது உடைகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Trending News

Latest News

You May Like