ரிதன்யாவுக்கு நடந்தது கொடுமை. வெளிப்படையாக பேசிய சசிகுமார்!

ஜூலை 10ம் தேதி இயக்குநர் சத்யா சிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் உருவாகியுள்ள ஃப்ரீடம் படம் வெளியாகவுள்ள நிலையில், அதுதொடர்பாக சசிகுமார் அளித்த பேட்டியில்,
சக மனுஷனை விசாரிக்கிறோம் என்கிற எண்ணம் போலீசாருக்கும் இருக்க வேண்டும். யாரையும் அடித்து துன்புறுத்தக் கூடாது. தவறு செய்திருந்தால் கூட அதை விசாரிக்க வேண்டிய வகையில் மட்டுமே விசாரிக்க வேண்டுமே தவிர சட்டத்துக்கு புறம்பாக காவலர்கள் விசாரணை நடத்துவதும், அடித்துக் கொல்வதும் கூடாது என வெளிப்படையாக திருப்புவனம் அஜித் குமார் மரணம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்துள்ளார் சசிகுமார்.
ஒரு மகளை பெத்து, வளர்த்து ஏகப்பட்ட செலவு செய்து கட்டிக் கொடுக்கிறோம். அந்த மகள் இல்லாமல் போய்விட்டால், பெத்தவங்களுக்கு எப்படி இருக்கும். வரதட்சனை கேட்டு ஒரு பெண்ணை திருமணம் செய்வதே அசிங்கமா இல்லை என சசிகுமார் வெளுத்து வாங்கி உள்ளார். காசுக்காக ஒரு உசுரு போவது எல்லாம் ஒருபோதும் நியாயமான செயலே கிடையாது. மனிதர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது மனமாற்றம் அடைந்தால் மட்டுமே சமூகம் மாறும். ரிதன்யா போன்று பல பெண்கள் இந்த வரதட்சனை கொடுமையால் தினமும் சித்ரவதைக்கு உள்ளாகுகின்றனர் என பேசியுள்ளார்.