மனோஜுக்கு என்ன தான் ஆனது? மரணத்திற்கு என்ன காரணம்..?

நடிகரும் இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மகனுமான மனோஜ் திடீரென காலமானார் என்ற தகவல் ஒட்டுமொத்த திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது..
என்ன நடந்தது..? மனோஜுக்கு இரு சிறுநீரகங்களும் செயலிழந்துவிட்டதாம். அப்போது மாரடைப்பும் ஏற்பட்டதாம். இதனால் மாரடைப்பை சரி செய்ய சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த 6 தினங்களுக்கு முன்புதான் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அவருடைய சிறுநீரகங்கள் செயலிழந்ததாலும் அறுவை சிகிச்சைக்கு உடல் ஒத்துழைக்காததாலும் அவரது உயிர் நேற்று மாலை பிரிந்தது.
மனோஜ் பாரதிராஜாவின் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இளையராஜா, சரத்குமார், நாசர், டி ராஜேந்தர், குஷ்பு, வெங்கட் பிரபு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் கார்த்தி, சேரன், நக்கீரன் கோபால், நடிகை சோனா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்துள்ளனர். எந்த அப்பாவுக்கும் இப்படி ஒரு நிலை வரக் கூடாது என நடிகர் சூரி, ஸ்ரீகாந்த், இயக்குநர் சேரன் உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர். பாரதிராஜாவை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை என கண்ணீர் மல்க சில நடிகர், நடிகைகள் தெரிவித்தனர். 83 வயதாகும் பாரதிராஜா இதை எப்படி தாங்கி, இதிலிருந்து மீண்டு வர போகிறார் என்பது தெரியவில்லை என்கிறார்கள்.