1. Home
  2. தமிழ்நாடு

மேடையில் அப்படி என்ன தான் நடந்தது.. தமிழிசையை அமித்ஷா கண்டித்தாரா?அண்ணாமலை விளக்கம்...!

1

தமிழிசை சவுந்தரராஜனிடம் அமித்ஷா மேடையில் பேசியது தொடர்பான பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விவாதப்பொருளாகி வருவது குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த அண்ணமாலை கூறியதாவது:-

தமிழிசை கட்சியில் மிகப்பெரிய உயரத்தில் உள்ளார். மேடையில் இரண்டு தலைவர்கள் பேசிய வீடியோவுக்கு பல விளக்கம் கொடுக்கிறார்கள். பாஜகவை பொறுத்தவரை இது ஒரு குடும்பம்.அமித்ஷா எல்லோரையும் குடும்பமாகத்தான் பார்ப்பார். பாஜகவில் ஏற்றம் இறக்கமாக யாரயையும் பார்க்க போவது கிடையாது. அதனால்தான் தமிழிசையை வீட்டிற்கு சென்று சந்தித்து விட்டு வந்தேன். இந்த கட்சியின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தலைவராக இருந்தார். இருக்கிறார்.. இருக்க போகிறார். அதனால் யூகத்திற்கு எந்த விதமான வேலையும் கிடையாது.

அந்த உரையாடல் கண்டிப்பா.. பாசமா என்று கேட்கிறீர்கள். அது பாசம். அமித்ஷா பேச்சு பாசம்தான். எங்க கிட்ட பேசும் போதும் அப்படித்தான் பேசுவார்.. எல்லாரிடமும் அப்படித்தான் அமித்ஷா பேசுவார். அமித்ஷாவை பொறுத்தவரை அது பாசம் மட்டும் தான்.. எங்கேயுமே கண்டிக்க மாட்டார். காரணம் அவரும் பாஜகவின் ஒரு கார்யகர்த்தாதான். இங்கே வந்து பெரியவர்கள் சின்னவர்கள்.. பயந்து போய் இருக்க வேண்டும்.. தான் கை கட்டி நிற்க வேண்டும்.. என்ற கலாசாரம் பாஜகவில் கிடையாது. அமித்ஷாவின் பேச்சு என்பது அன்பு, அரவணைப்புதான். அதை தமிழிசையும் அமித்ஷாவிடம் அன்போடுதான் பேசினார். இதை பெரிதுபடுத்துவதில் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

Trending News

Latest News

You May Like