இன்ஸ்டா நண்பனை நம்பி சென்றதால் நடந்த விபரீதம்!

அங்கு, சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி, நிர்வாண வீடியோக்களை தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அமல் அகமது இவ்வாறு பல வீடியோக்களை எடுத்து, ஒரு நாள், தனது உண்மையான சுயரூபத்தைக் காட்டினார். அமல் அகமது அந்தப் பெண்ணைத் தொடர்பு கொண்டு, "நீ என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும், இல்லையெனில் உன் ஆபாச வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன்" என்று மிரட்டினார்.
இதனால் பயந்துபோன சிறுமி, அமல் அகமது அழைத்த எல்லா இடங்களுக்கும் சென்றாள். அங்கு, அமல் அகமது அந்தப் பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும், அவளை அடித்து துன்புறுத்தினார். இது போதாதென்று, மலப்புரம் மாவட்டம் முண்டபரம்பு பகுதியைச் சேர்ந்த அமல் அகமதுவின் நண்பர் பஷீரிடம் சிறுமியை அழைத்து சென்றார்.

இந்த சூழ்நிலையில், இரண்டு ஆண்களின் பாலியல் துன்புறுத்தலைத் தாங்க முடியாத மாணவி, தனது பெற்றோரிடம் கூறி அழுதார். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக கோட்டக்கல் போலீசில் புகார் அளித்தனர். வழக்குப் பதிவு செய்த போலீசார், நேற்று அமல் அகமது மற்றும் அவரது நண்பர் பஷீரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.