என்னமா யோசிக்கிறாங்க! திருமண விருந்தில் இருக்கைகளை தேங்காய் போல் வைத்த தேங்காய் வியாபாரி..!
திருமண விழாக்களில் தங்கள் கற்பனைத் திறனைப் பயன்படுத்தி மண மேடை, உணவு அரங்கு உள்ளிட்டவற்றை அமைத்துக்கொள்கின்றனர்.அப்படி ஒரு திருமண விழா, கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் அண்மையில் நடைபெற்றது.
திருமணத்திற்கு வந்தவர்களுக்குச் சுவையான உணவு பரிமாறப்பட்டது. அதில்தான் திருமண வீட்டார் புதுமையான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
வழக்கமாக விருந்து பரிமாறும் அரங்கில் உணவு மேசை, நாற்காலிகள்தான் போடப்படும். ஆனால், பொள்ளாச்சி தென்னை நகரம் என்பதால் தேங்காய் வடிவில் இருக்கைகளை அமைத்திருந்தனர்.
திருமணத்திற்கு வந்தவர்கள் வியப்பு கலந்த மகிழ்ச்சியுடன் அந்த இருக்கைகளில் அமர்ந்து விருந்துண்டனர். அந்த இருக்கைகளைத் தங்கள் கைப்பேசியில் புகைப்படம், காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களிலும் அவர்கள் பதிவிட்டுள்ளனர்.
அத்தகைய ஒரு காணொளி இணையத்தில் பரவிவருகிறது.
தேங்காய் 😂 pic.twitter.com/AIAx1vXw1S
— 🌹டாலியா🌹(இனியா) (@Itzdahliaa) November 24, 2024