1. Home
  2. தமிழ்நாடு

என்னமா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..! மணப்பெண் தாயால் ஷாக்கான துணை முதல்வர் உதயநிதி..!

1

சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் சென்னை ஆர்.கே.நகர் தங்கம் மாளிகையில், எளியோர் எழுச்சி நாள் எனும் பெயரில் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. தமிழக துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் 48 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார்.

48 ஜோடிகளுக்கும் கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30க்கும் மேற்பட்ட சீர்வரிசை பொருட்கள் மற்றும் ரூபாய் 25,000 ரொக்கம் வழங்கி மண வாழ்க்கை சிறப்பாக வாழ்த்தினார் துணை முதல்வர் உதயநிதி.

அப்போது ஒரு ஜோடிக்கு துணை முதல்வர் தாலி எடுத்துக் கொடுத்தார். தாலியை எடுத்து மணமகளின் தாயிடம் கொடுத்தார் உதயநிதி. பதற்றத்தில் இருந்த தாய், தானே தாலியை வாங்கி மணமகள் கழுத்தில் கட்டப் போனார். இதைப் பார்த்து ஷாக் ஆன உதயநிதி, "என்னம்மா நீங்க கட்டப்போறீங்க.. மாப்ளைக்கிட்ட கொடுங்க" என சிரித்தபடி கூறினார்.

இந்த நிகழ்வால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.


 

Trending News

Latest News

You May Like