1. Home
  2. தமிழ்நாடு

போடுற வெடிய..? மீண்டும் கார் பந்தயத்தில் களமிறங்கும் நடிகர் அஜித்!

1

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், இவரது நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் அன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, குட்பேட் அக்லி படமும் அடுத்தாண்டு வெளியாக உள்ளது. முன்னதாக நடிகர் அஜித் குமார் பைக் ஓட்டுவதில் அதிக ஆர்வம் உள்ளவர் என்பது ரசிகர்களுக்குத் தெரிந்த விஷயம் தான். சூட்டிங் இல்லாத நேரத்தில் தன்னுடைய பைக்கை எடுத்துக் கொண்டு ஜாலியாக நண்பர்களுடன் மோட்டார் பயணம் மேற்கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். இந்தநிலையில், அஜித் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் படியனான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னெவென்றால் நடிகர் அஜித் மீண்டும் மோட்டார் பந்தையத்தில் கலந்து கொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக வெளியாகி உள்ள தகவலின்படி, நடிகர் அஜித் குமார் 2025 -ல் நடைபெறும் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இங்கிலாந்து, ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. இதை ஒருங்கிணைப்பதற்கு விளம்பரதாரர்களும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. விரைவில் ஐரோப்பிய ஜிடி4 சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை நடிகர் அஜித் குமார் வெளியிடுவார் என்று கூறப்படுகிறது.

Trending News

Latest News

You May Like