1. Home
  2. தமிழ்நாடு

என்ன ராசா பண்றீங்க..! செல்போனில் ஐபிஎல் பார்த்தபடியே பேருந்தை இயக்கிய ஓட்டுநர்..!

1

கடந்த திங்கட்கிழமை இரவு மும்பை அணிக்கும் , குஜராத் அணிகளுக்கு ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்நிலையில், கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் தனது கைப்பேசியில் நேரடி ஒளிபரப்பை பார்த்தபடியே பேருந்தை இயக்கியதாகக் கூறப்பட்டது.இதனால் கவனம் இழந்த அவர், இரண்டு முறை முன்னே சென்ற கார், அரசுப் பேருந்தின் மீது மோதுவதுபோல் சென்றுள்ளார். இதையடுத்து, பயணிகள் கூச்சலிட்டனர். மேலும் அந்த ஓட்டுநரிடம் கைப்பேசியை அணைத்துவிட்டு பேருந்தை இயக்குமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.ஆனால் அதை சட்டை செய்யாத ஓட்டுநர், தொடர்ந்து செல்போனை பார்த்தபடி பேருந்தை இயக்கியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும், வீடியோவும் இணையத்தில் வெளியான நிலையில், சிலர் இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் புகார் தெரிவித்துள்ளனர்.

1

புகாரின் பேரில், சிதம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாசலம், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன் ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் பேருந்து ஓட்டுநரை நேற்று நேரில் அழைத்து விசாரித்தனர். விசாரணையில், அந்த ஓட்டுநர் சக்கரமங்கலம் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் என்பதும் பேருந்தை இயக்கியபோது, செல்போனில் கிரிக்கெட் போட்டியைப் பார்த்ததும் உறுதியானது.

இதுகுறித்து ஓட்டுநர் சுரேஷ் போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் மன்னிப்புக் கடிதம் வழங்கிய போதும் போக்குவரத்து அதிகாரிகள் அவரின் ஓட்டுநர் உரிமத்தை ஒரு மாத காலத்துக்கு தற்காலிகமாக ரத்து செய்தனர். 

Trending News

Latest News

You May Like