1. Home
  2. தமிழ்நாடு

என்ன மிஸ்டர் சீமான் விஜய் அண்ணனுக்கு சாபம் எல்லாம் விடுறீங்க.. நடிகை விஜயலட்சுமி ஆவேசம்..!!

Q

விஜய் அரசியலுக்கு வந்தால் விஜய்க்கு என் ஆதரவு உண்டு. என் தம்பி அவர் என்றெல்லாம் நாதக கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஊடகங்களில் கூறி வந்த நிலையில் சமீபத்தில் தமிழக வெற்றிக் கழக முதல் மாநாட்டில் அக்கட்சித் தலைவர் விஜய், ’’கொள்கை கோட்பாடு அளவில் திராவிடத்தையும், தமிழ்த்தேசியத்தையும் நாம் பிரித்துப் பார்க்கப் போவதில்லை., திராவிடமும், தமிழ்தேசியமும் இந்த மண்ணின் இரண்டு கண்கள் என்பது தமது கருத்து’’ என பேசியிருந்தார்.

இதற்கு சீமான், ’’சினிமாவில் பேசுவது போன்ற பஞ்ச் டயலாக் எல்லாம் இல்லை தம்பி இது. இது நெஞ்சு டயலாக் .எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தந்தையே வந்தாலும் எதிரிதான் அதில் தம்பியும் இல்லை, அண்ணனும் இல்லை’’ என்று தெரிவித்திருந்தார். இது ஒட்டுமொத்த மீடியாவிலும் அரசியலிலும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதில் நடிகை விஜயலட்சுமி கூறியிருப்பதாவது: என்ன மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுறீங்க? நேற்று விஜய் அண்ணனுக்கு, ஒன்னு ரோட்டோட இந்த பக்கம் இரு; இல்லைன்னா அந்த பக்கம் இரு.. சென்டரில் இருந்தா லாரி அடிச்சு செத்துப் போயிடுவன்னு சாபம் எல்லாம் விடுறீங்க?

நீங்க என்ன ரொம்ப உத்தமரா மிஸ்டர் சீமான்? சாபம் எல்லாம் விடுவதற்கு.. நான் உங்க ரூட்டுக்கே வருகிறேன். அண்ணன் விஜய் ஆகட்டும் இல்லை திமுகவாகட்டும்.. கொள்கை ரீதியாகத்தானே தவறு பண்ணி இருக்காங்க.. அதாவது உங்க பிரகாரம் மக்கள் ஒன்றும் சொல்லலை.. நீங்க சொல்லிகிட்டு இருக்கீங்க..

So கொள்கை ரீதியாக தவறு பண்றவங்களே லாரி அடிச்சு சாவாங்க அப்படின்னா.. எங்களை மாதிரி பெண்களோட வாழ்க்கையை சீரழிச்சு எங்களை நடுரோட்டுல.... விட்டீங்களே.. நீங்க அதை அடிச்சு சாகமாட்டீங்க மிஸ்டர் சீமான்?

முதலில் உங்க கட்சியில் இருக்கிற ஓட்டையை எல்லாம் போய் சரி பண்ணுங்க போங்க.. உங்க கட்சியில் நிறைய ஊழல் நடந்துகிட்டு இருக்காம். அடுத்தாப்ல திருச்சி சூர்யா வந்து உங்க ஆபாச வீடியோ எல்லாம் ரிலீஸ் பண்ணி உங்க மானத்தை வாங்க போறாராம்.. அதை எல்லாம் முதலில் என்ன என முதலில் போய் பாருங்க..

திமுகவுக்கு என்ன செய்யனும் என திமுகவுக்கு தெரியும்.. விஜய் அண்ணனுக்கு என்ன செய்யனும் என விஜய் அண்ணனுக்கு தெரியும். இப்படி எல்லாருக்கும் அவங்க வேலை என்ன என்பது நன்றாகவே தெரியும். தலைவர் பிரபாகரன் கொடுத்த வேலையை ஒழுங்கா பார்க்க தெரியாம காலையில் எழுந்தது முதல் சும்மா பப்ளிசிட்டி செய்து கொண்டு, சபித்துக் கொண்டு நீங்கதான் கூமுட்டை மாதிரி அலைந்து கொண்டிருக்கீங்க.. ஓகேவா?

ஏதோ பெரிய உத்தமர் மாதிரியும் கண்ணகி மாதிரியும் சாபம் எல்லாம் விடாதீங்க.. 24 மணிநேரமும் பெங்களூரில் இருந்து நான் உங்களுக்குதானே சாபம் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்.. அதனால கொள்கை ரீதியாக தவறு செய்தவங்க லாரி அடிச்சு சாவாங்க அப்படீன்னா நீங்க தமிழ்நாட்டு மக்கள் செ.....ல அடிச்சே சாவீங்க. இவ்வாறு நடிகை விஜயலட்சுமி கூறியுள்ளார்.


 


 

Trending News

Latest News

You May Like