இந்த வார ஓடிடி-யில் வெளியாகும் தமிழ், மலையாள திரைப்படங்கள் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ!
Kadha Innuvare: இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கத்தில் வெளியான மலையாள திரைப்படம் Kadha Innuvare. நான்கு வெவ்வேறு காதலர்களுக்குள் நடைபெறும் காதல் கலாட்டாக்களே இப்படத்தின் கதைக்களம். இப்படம் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது
Bougainvillea: இயக்குநர் அமல் நீரத் இயக்கத்தில் நடிகர் பகத் பாசில் நடிப்பில் வெளியான மலையாள திரைப்படம் Bougainvillea. கேரளாவை சுற்றிப்பார்க்க வந்த சுற்றுலா பயணிகள் ஒவ்வொருவராக மர்மமான முறையில் காணாமல் போக அதனை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வருகின்றனர். அப்போது இந்த சம்பவத்தில் ஒரு குடும்பம் சிக்கிக்கொள்ள அவர்கள் எப்படி மீண்டு வருகின்றனர் என்பதே இப்படத்தின் கதைக்களம். க்ரைம், திரில்லர், சஸ்பென்ஸ், ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இப்படம் நாளை சோனி லீவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
கங்குவா: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் 'கங்குவா'. மிகப்பெரிய ஹைப்புடன் வெளியான இப்படம் மக்களை ஈர்க்க தவறியது. இன்னும்சொல்லபோனால் படம் ஃபிளாப் என்று முடிவுக்கே ரசிகர்கள் வந்துவிட்டனர். மிக பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களை ஈர்க்க தவறியது படக்குழுவினரை அப்சட் செய்தது. கடந்த மாதம் 14ம் தேதி தியேட்டரில் வெளியான இப்படம் நாளை அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது.