1. Home
  2. தமிழ்நாடு

தூய்மை பணியாளர்கள் வைத்த கோரிக்கைகள் என்ன ? மேயர் பிரியா பேட்டி..!

1

தூய்மை பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் இன்று 8-ம் கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தினர். சில நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா கூறியதாவது ,

பணி நிரந்தரம், பணி பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை தூய்மைப் பணியாளர்கள் தரப்பில் முன்வைத்தனர். பணி பாதுகாப்பு எப்போதுமே அவர்களுக்கு உண்டு என பேச்சுவார்த்தையில் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப கேட்டுக்கொள்கிறோம்.

முன் எப்போதும் இல்லாத வகையில் பணியில் பாதுகாப்பு இருக்கிறது. பல்வேறு சலுகைகளும் உள்ளன.அவர்கள் பணியில் சேர வேண்டும். பிற கோரிக்கைகள் குறித்து ஒரே நாளில் முடிவு எடுக்க முடியாது. தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு எடுக்கலாம். என தெரிவித்தார் .

Trending News

Latest News

You May Like