1. Home
  2. தமிழ்நாடு

விளக்கம் கேட்டு ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன?”- விரிவாகப் பார்ப்போம்..!

1

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கோரி தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும்” என்று அறிவுறுத்தியிருந்தது.

இதையடுத்து, நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10- க்கும் மேற்பட்ட மசோதாக்களை விளக்கம் கேட்டு, தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.

இதையடுத்து, மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பும் வகையில், சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்கள் என்னென்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாக்கள், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், புதிய சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதாக்கள், பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா, மதுரை, கோவை, திருப்பூர், ஓசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான மசோதா, தமிழ்நாடு மீன்வள மற்றும் கால்நடை பல்கலைக்கழத்தில் ஆய்வு மற்றும் விசாரணை நடத்த ஒப்புதல் கோரிய மசோதா, தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக் காலத்தை 3 ஆண்டுகளாகக் குறைக்கும் மசோதா ஆகிய மசோதாக்களை தமிழக அரசின் தலைமைச் செயலகத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பியுள்ளார்.

Trending News

Latest News

You May Like